என்னுடைய இந்த சாதனையை அவங்க செய்யனும் அதுவே என் ஆசை – 100 ஆவது போட்டிக்கு முன் கோலி பேட்டி

Kohli Press
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கருண ரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

Kohli-1

- Advertisement -

இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்படி இந்த போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இருந்து 100வது டெஸ்ட் போட்டிக்கான கேப்பை கௌரவ பரிசாக விராட் கோலி பெற்றுக்கொண்டார்.

அதன்படி முதல் இன்னிங்ஸை இந்திய அணி தற்போது விளையாடி வரும் வேளையில் 80 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்த வேளையில் விராட் கோலி களம் புகுந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதமின்றி விளையாடி வரும் விராட் கோலி இந்த 100-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சிறப்பாக விளையாடி வந்த அவர் 76 பந்துகளை சந்தித்த நிலையில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்தபோது எம்புல்டேனியா பந்துவீச்சில் போல்டு ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.

kohli 1

அதன்காரணமாக தற்போது மீண்டும் ஒருமுறை அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். இந்நிலையில் இந்த 100-வது டெஸ்ட் போட்டிக்கு களம் இறங்கும் முன்பாக விராட் கோலி தனது நெகிழ்ச்சியான சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது உண்மையிலேயே எனக்கு ஒரு மிகச் சிறப்பான தருணம். இந்த மகிழ்ச்சியான வேளையில் எனது மனைவி, சகோதரர், சகோதரி, தாய் என எனது குடும்பமே மைதானத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மூலம் மிக பெருமையாக உணர்கிறேன். நீங்கள் எல்லாம் இல்லை என்றால் நிச்சயம் என்னால் இதை செய்திருக்க முடியாது. அதேபோன்று பிசிசிஐக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். இன்று வரை நான் இந்திய அணிக்காக விளையாட அவர்களும் ஒரு காரணம். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் நான் நிறைய போட்டிகளில் விளையாடி விட்டேன்.

இதையும் படிங்க : மலைபோல ரன்கள் ! உலகளவில் சாதித்த தமிழக வீரர் – இந்திய தேர்வுக்குழு கவனிக்குமா

என்னிடம் இருந்து அடுத்த தலைமுறை வீரர்கள் ஒரு விடயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் எனில் நான் கிரிக்கெட்டின் உண்மையான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடி விட்டேன். எனது இந்த சாதனையை இளம் வீரர்கள், அடுத்து வரும் தலைமுறையினர் செய்ய வேண்டும் அதுவே எனது விருப்பம் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement