மலைபோல ரன்கள் ! உலகளவில் சாதித்த தமிழக வீரர் – இந்திய தேர்வுக்குழு கவனிக்குமா

tn
- Advertisement -

இந்தியாவின் பிரபல வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் லீக் சுற்று தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாக்-அவுட் சுற்று போட்டிகள் வரும் 2022 ஐபிஎல் தொடர் முடிந்த பின் நடைபெற உள்ளது.

ranji

- Advertisement -

இந்த தொடரில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக கிரிக்கெட் அணி எலைட் குரூப் ஹச் பிரிவில் இடம் பிடித்து விளையாடி வருகிறது. அதில் டெல்லி மற்றும் சட்டீஸ்கர் ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த தனது முதல் 2 லீக் சுற்றுப் போட்டிகளில் தமிழக அணி அசத்தலாக விளையாடிய போதிலும் அந்த போட்டி டிராவில் முடிந்தன.

அசத்தும் பாபா இந்திரஜித்:
இதை அடுத்து இந்த ரஞ்சி கோப்பையில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான தனது 3வது லீக் போட்டியில் நேற்று தமிழகம் களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய தமிழகத்துக்கு கௌசிக் காந்தி 10, சூரியபிரகாஷ் 1, பாபா அபராஜித் 6 என டாப் 3 பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்கள். அடுத்து வந்த கேப்டன் விஜய் சங்கரும் 11 ரன்களில் அவுட்டாக 32/4 என ஆரம்பத்திலேயே தமிழ்நாடு தடுமாறியது.

Baba Indrajith

அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய பாபா இந்திரஜித் சக வீரர் சாய் கிஷோர் உடன் இணைந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராடினார். மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் பேட்டிங் செய்த இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த தங்களது அணியை ஓரளவு மீட்டெடுத்தார்கள். தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியில் சாய் கிஷோர் அரைசதம் அடித்து 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட சிறப்பாக பேட்டிங் செய்த பாபா இந்திரஜித் சதமடித்து 100 (132) ரன்களில் அவுட்டானார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு 256/7 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

மலைபோல ரன்கள்:
இந்த போட்டியில் தமிழ்நாடு தடுமாறியபோது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த பாபா இந்திரஜித் இந்த ரஞ்சி கோப்பை முழுவதும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் சதமடித்த அவர் 117 (149) ரன்கள் எடுத்து அதன் பின் சட்டிஸ்கர் அணிக்கு எதிராக நடந்த 2வது போட்டியிலும் அபாரமான பேட்டிங் செய்து சதம் விளாசி 127 (141) ரன்களை எடுத்தார். மொத்தத்தில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 3 சதங்களை அடித்துள்ளா பாபா இந்திரஜித் ஹாட்ரிக் சதங்களை அடித்து தமிழ்நாடு அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வருகிறார்.

Baba Abarajith Baba Indrajith Ranji Trophy 2022

சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் 127 ரன்கள் எடுக்க இவரின் சகோதரர் அபராஜித் 166 ரன்கள் விளாசினார். இதன் வாயிலாக உள்ளூர் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் ஒரே அணிக்காக விளையாடி சதம் அடித்த இரட்டை சகோதரர்கள் என்ற வரலாற்று சாதனையை இந்த ஜோடி படைத்தது.

- Advertisement -

உலக அளவில் சாதனை:
இப்படி அடுத்தடுத்து அசத்தலாக செயல்பட்டு வரும் பாபா இந்திரஜித் இந்த சீசனில் மட்டுமல்லாது கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ரஞ்சி கோப்பை உள்ளிட்ட பல உள்ளூர் கிரிக்கெட்டில் மலைபோல ரன்களை குவித்து வருகிறார். அதாவது கடந்த 2016க்கு பின் அவர் இதுவரை 33 போட்டிகளில் 2512 ரன்களை 66.10 என்ற அபார சராசரியில் குவித்துள்ளார். இந்த 66.10 சராசரி என்பது கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பின் உலக அளவில் நடந்த உள்ளூர் போட்டிகளில் ஒரு இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச சராசரியாகும். 2016க்கு பின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்:
பஹிர் ஷா – 29 போட்டிகள், 2554 ரன்கள், 69.02 சராசரி.
டேவோன் கான்வே – 44, 4105 ரன்கள், 68.41 சராசரி.
ஓபிஸ் பிளெனர் – 39 போட்டிகள், போட்டிகள், 2750 ரன்கள், 67.07 சராசரி.
பாபா அபராஜித் – 33 போட்டிகள், 2512 ரன்கள், 66.10 சராசரி.

இதையும் படிங்க : 5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்த இளம்வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

இப்படி தனது அபார திறமையால் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பாபா இந்திரஜித் தமிழக அணியில் முக்கிய வீரராக உருவெடுத்த போதிலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இவ்வளவு ரன்களைக் குவித்து வரும் இவரை இந்திய தேர்வு குழுவினர் கவனித்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வழங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement