5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்த இளம்வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Vihari
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கியது. இந்த தொடரிலிருந்து புதிய இந்திய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தனது புதிய பயணத்தை துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் டேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

INDvsSL

- Advertisement -

இந்திய அணியில் கடந்த பல வருடங்களாக முக்கிய வீரர்களாக விளையாடி வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் நீக்கப்பட்டதை அடுத்து அவர்களின் இடத்தில் இளம் வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடித்தார்கள். அதேபோல் ஜடேஜா, அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகிய மும்முனை சுழல் பந்துவீச்சு கூட்டணியுடன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பிடித்தார்கள்.

முக்கிய இடத்தில் ஹனுமா விஹாரி:
இந்த போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியில் அளப்பரிய பங்காற்றிய அவருக்கு பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் சிறப்பு தொப்பியை பரிசளித்து கௌரவ படுத்தினார்.

Vihari-1

முன்னதாக இப்போட்டியில் புஜாரா விளையாடிய 3வது இடத்தில் 28 வயது நிரம்பிய இளம் வீரர் ஹனுமா விஹாரி களமிறக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக விளையாடத் தொடங்கிய அவருக்கு புஜாரா மற்றும் ரகானே ஆகிய மூத்த வீரர்கள் இருந்த காரணத்தால் ஒரு தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் இல்லாத காரணத்தால் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள ஹனுமா விஹாரிக்கு டாப் ஆர்டரில் 3வது இடத்தில் விளையாடும் சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

- Advertisement -

தியாகம் செய்த விஹாரி:
இந்த வாய்ப்பு அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை என்பதே உண்மையாகும். ஏனெனில் கடந்த 4 வருடங்களாக இந்திய அணியில் இடம் பிடித்திஇருந்த போதிலும் ஒரு நிரந்தர இடம் கிடைக்காமல் வெறும் 12 போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளார். இத்தனைக்கும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவர் சிறப்பாக விளையாடிய போதிலும் யாரேனும் காயம் அடைந்தால் மட்டுமே 11 பேர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று வந்தார்.

Sridhar

இந்த வேளையில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு போட்டியில் தனது இடத்தை ஹனுமா விஹாரி தியாகம் செய்ய தயாராக இருந்ததாக முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார் இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விசாகப்பட்டினத்தில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியின் போது என்னிடம் வந்த ஹனுமா விஹாரி “சார் இந்த போட்டியில் நான் விளையாடி இருக்க கூடாது” என கூறியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

- Advertisement -

அந்தப் போட்டிக்கு முன்பாக ஜமைக்காவில் அவர் களமிறங்கிய போட்டியில் சதம் அடித்த காரணத்தால் விசாகப்பட்டினத்தில் விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் இருந்த காரணத்தால் எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை 5வது நாளில் முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் வென்றோம்”

vihari

“அந்த போட்டி முடிந்த பின்பும் கூட ஹனுமா விஹாரி என்னிடம் வந்து “சார், அடுத்த போட்டியில் நான் கண்டிப்பாக விளையாடக்கூடாது. ஏனெனில் இந்த தொடரில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். அவருடன் முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாடும் மயங்க் அகர்வால் சிறப்பாகப் பேட்டிங் செய்கிறார். எனவே 6வது பேட்ஸ்மேனாக இருக்கும் எனக்கு பதிலாக 6வது பவுலருக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியா எளிதாக வெல்லும்” என கூறினார்.

- Advertisement -

அவர் தன்னைவிட இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு எப்போதும் அதற்கு ஆதரவாக செயல்பட்டார்” என கூறினார். அதாவது பெஞ்சில் அமர்ந்து இருந்தாலும் பரவாயில்லை தம்மால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காக தனது இடத்தை தியாகம் செய்ய விஹாரி தயாராக இருந்ததாக ஸ்ரீதர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி.யின் இந்த முடிவால் தான் அழிவிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றது டெஸ்ட் கிரிக்கெட் – சுவாரசிய தகவல் இதோ

இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட அவருக்கு தற்போது ஒரு வழியாக இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைத்துள்ளது உண்மையாகவே அவரின் தியாக மனப்பான்மைக்கு கிடைத்த பரிசாகும்.

Advertisement