ஐ.சி.சி.யின் இந்த முடிவால் தான் அழிவிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றது டெஸ்ட் கிரிக்கெட் – சுவாரசிய தகவல் இதோ

IND
- Advertisement -

மனிதனின் இயந்திர வாழ்க்கையை போல உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு விளையாட்டாக விளங்கும் கிரிக்கெட் போட்டிகளும் இன்று பல பரிணாமங்களை எட்டியுள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பாக முதல் முறையாக விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் ஆரம்ப காலங்களில் நாட்கள் கணக்கே இல்லாமல் முடிவு கிடைக்கும் வரை விளையாடப்பட்ட கொண்டே இருந்தது. அதன்பின் நாட்களை அடிப்படையாகக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் எனும் 5 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் உருவாக்கப்பட்டது.

test

- Advertisement -

இந்த டெஸ்ட் கிரிக்கெட் தான் கடந்த 1970க்கு முன்பு வரை முக்கிய கிரிக்கெட்டாக இருந்தது. அதன்பின் கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக 60 ஓவர் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் நடைபெற துவங்கி நாளடைவில் 50 ஓவர் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளாக தற்போது நடைபெற்று வருகிறது.

அழிவை நோக்கி சென்ற டெஸ்ட் கிரிக்கெட்:
அதன்பின் கிரிக்கெட் விளையாட்டை பொழுதுபோக்காக மாற்றி அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 20 ஓவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் முழுமையாக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் ஆகியவற்றைவிட வெறும் 6 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் இந்த 20 ஓவர் போட்டிகள் ரசிகர்களிடையே எதிர்பார்த்ததைவிட மிகவும் பிரபலமானது. அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டை பெரும்பாலான ரசிகர்கள் வெறுக்கத் துவங்கி டி20 கிரிக்கெட்டை விரும்ப தொடங்கினார்கள்.

Sachin Tendukar Muralitharan

போதாக்குறைக்கு ஒரு கட்டத்தில் 10 க்கு 8 டெஸ்ட் போட்டிகள் ட்ராவில் முடிந்த காரணத்தால் முடிவு கிடைக்காத ஒரு போட்டியை எதற்காக 5 நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என பல ரசிகர்கள் வெளிப்படையாகவே டெஸ்ட் போட்டிகளை வெறுத்தார்கள். மொத்தத்தில் இந்த டி20, டி10 போன்ற போட்டிகளின் வருகையால் கிரிக்கெட்டின் உண்மையான உயிர் நாடியாக கருதப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழிவை நோக்கி செல்ல துவங்கியது.

- Advertisement -

புத்துயிர் பெற்ற டெஸ்ட் கிரிக்கெட்:
இதை இப்படியே விட்டால் டெஸ்ட் கிரிக்கெட் காணாமல் போய்விடும் எனக் கருதிய சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 உலககோப்பை போல வரலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கும் “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்” என்ற உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்புவரை தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன் என்ற பட்டத்தை ஐசிசி கொடுத்து வந்தது. ஆனால் இந்த புதிய உலக கோப்பையில் வெற்றி பெற்று புள்ளிகளை பெற்றால் மட்டுமே “டெஸ்ட் சாம்பியன்” பட்டத்தை பெற முடியும் என்ற நிலைமையை ஐசிசி உருவாக்கியது.

wtc ind

அதாவது உலகக் கோப்பை போலவே டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று அதில் புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்தால் மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாடி டெஸ்ட் சாம்பியனாக கோப்பையை வெல்ல முடியும் என்ற புதிய கோட்பாடுகளை ஐசிசி அறிவித்தது. அதன் காரணமாக அதற்கு முன்பு வரை வெறும் பெயருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அணிகள் அதற்குப் பின் எப்படியாவது வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடத் தொடங்கின.

- Advertisement -

அசத்தல் புள்ளிவிவரம்:
முதலில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு முடிவு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு 4 இன்னிங்ஸ்களும் விளையாடி முடிக்கப்பட வேண்டும். ஆனால் 2000 – 2010 வாக்கில் பெரும்பாலான அணிகள் ஒவ்வொரு இன்னிங்சிலும் குறைந்தது 400 – 700 ரன்களை மலைபோல விளாசி வந்தன. அதற்கு ஈடாக எதிரணியும் அதே ரன்களை அடிப்பதற்குள் பெரும்பாலான போட்டிகள் டிராவில் முடிந்தன.

ind vs eng

அந்த வகையில் 1990 – 2000 வரையிலான காலகட்டத்தில் 190 போட்டிகளில் நடந்த முதல் இன்னிங்சில் 2 அணிகளும் 400 ரன்களுக்கு மேல் அடித்தன. ஆனால் கடந்த 2000 – 2010 காலகட்டத்தில் அது 337 போட்டிகளாக அதிகரித்தது. அதன் காரணமாகவே பெரும்பாலான போட்டிகள் டிராவில் முடிந்தது. ஆனால் 2010 – 2020 வரையிலான காலகட்டத்தில் இது 258 போட்டிகளாக குறைந்துள்ளது.

- Advertisement -

அதேபோல் 1990 – 2000 வரையிலான காலகட்டத்தில் 138 போட்டிகளில் நடந்த முதல் இன்னிங்சில் 2 அணிகளும் 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகின. இது 2000 – 2010 வரையிலான காலகட்டத்தில் 151 போட்டிகளாகவும் 2010 – 2020 வரையிலான காலகட்டத்தில் 164 போட்டிகளாகவும் உயர்ந்துள்ளது. அதாவது சமீப காலங்களாக பேட்டிங்கின் கை குறைந்து பந்து வீச்சின் கை மீண்டும் ஓங்கியுள்ளதால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிடைக்க துவங்கியுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியிடம் 100 ஆவது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கிய பின்னர் – டிராவிட் பேசியது என்ன?

சமீப காலங்களாக நடைபெறும் 10ல் 8 போட்டிகளுக்கு முடிவு கிடைக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக முன்பைவிட டெஸ்ட் போட்டிகளை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் பார்க்கத் துவங்கி உள்ளார்கள். மொத்தத்தில் ஒரு காலத்தில் டி20 போட்டிகளின் வருகையால் அழிவை நோக்கி சென்ற டெஸ்ட் கிரிக்கெட் இன்று புத்துயிர் பெற்றுள்ளது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement