விராட் கோலியிடம் 100 ஆவது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கிய பின்னர் – டிராவிட் பேசியது என்ன?

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று மொகாலி மைதானத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலிக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது டெஸ்ட் போட்டி என்பதால் இந்த போட்டியில் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கும் முன் இன்று காலை சிறப்பு நிகழ்வாக விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் கேப்பினை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கி கௌரவித்தார். விராட் கோலி இந்த 100-வது டெஸ்ட் கேப்பை கைப்பற்றும் போது அவருடன் அவரது மனைவியும் உடனிருந்தார்.

- Advertisement -

சக வீரர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் விராட் கோலி இந்த பெருமையை ராகுல் டிராவிட் இடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்நிலையில் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கிய பின்னர் டிராவிட் சில பாராட்டுகளையும் விராட் கோலிக்கு வழங்கினார். அதன்படி டிராவிட் கூறுகையில் :

இது பெருமை உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒன்றுதான். அந்த அளவிற்கு நீங்கள் உழைத்துள்ளீர்கள். நிச்சயம் இனி வரும் காலங்களிலும் நீங்கள் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள். ஓய்வறையில் நான் கூறியது போன்றே இதை நீங்கள் இரட்டிப்பாக்க வேண்டும் என்று டிராவிட் நெகிழ்ச்சியுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற சிறியவராக நீங்கள் இருந்து தற்போது 100வது போட்டியில் விளையாடும் அளவிற்கு வந்து இங்கு நிற்கிறீர்கள்.

- Advertisement -

இதற்காக அனைத்தையும் நீங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே வழங்கியுள்ளீர்கள். நாட்டிற்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரராக உங்களது பயணம் இதுவரை அற்புதமாக இருந்துள்ளது என்று டிராவிட் நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க : நாங்களா? அவரையா? சுரேஷ் ரெய்னா குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு – ரசிகர்களை ஷாக் ஆக்கிய குஜராத் அணி

டிராவிட்டிடம் இருந்து 100-வது டெஸ்ட் போட்டிக்கான கேப்பை பெற்றுக் கொண்ட விராட் கோலி அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது மனைவி, சகோதரர், சகோதரி தாய் மற்றும் சிறுவயது பயிற்சியாளர் என தனது குடும்பமே இந்த போட்டியை காண மைதானத்திற்கு வந்துள்ளது. இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடுவேன் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement