நாங்களா? அவரையா? சுரேஷ் ரெய்னா குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு – ரசிகர்களை ஷாக் ஆக்கிய குஜராத் அணி

Raina
- Advertisement -

வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மும்பையில் கோலாகலமாக துவங்குகிறது. அந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த வருடம் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ள காரணத்தால் 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது.

ipl

- Advertisement -

இம்முறை அனைத்து 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் பங்கேற்க உள்ளன. அந்த வகையில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகள், மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளது. அதன்பின் வெற்றியாளரை தீர்மானிக்கும் பைனல் உட்பட பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மொத்தம் 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் வரும் மே 29ஆம் தேர்வு நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது.

விலைபோகாத சுரேஷ் ரெய்னா:
முன்னதாக இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 2018க்கு பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் நடந்த இந்த ஏலத்தில் 204 வீரர்கள் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டார்கள். அதில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடி ரூபாய்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார்.

raina

இருப்பினும் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எந்த அணியும் வாங்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்தது. ஏனெனில் ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடிய அவர் தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பந்து வீச்சாளர்களை பவுண்டரிகளுடம் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு பல சாதனைகளைப் படைத்து மிஸ்டர் ஐபிஎல் என்று பெயரெடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக எம்எஸ் தோனிக்கு பின் சென்னை அணியில் முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடி வந்த அவரை “சின்ன தல” என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். ஆனால் சமீபகாலங்களாக பார்ம் இல்லாத காரணத்தால் அவரை சென்னை அணி நிர்வாகம் கூட வாங்க ஆர்வம் காட்டாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

Raina

காற்றில் வந்த வதந்தி:
அந்த வேளையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இங்கிலாந்தின் நட்சத்திர தொடக்க வீரர் ஜேசன் ராய் 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் 20222 தொடரில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு பதில் குஜராத் அணி நிர்வாகம் மாற்று வீரரை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத சுரேஷ் ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் வாங்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.

இதையும் படிங்க : புஜாரா, ரஹானேவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? – கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படை

“ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த சுரேஷ் ரெய்னாவை குறைந்த பட்சம் குஜராத் அணியாவது வாங்குகிறதே” என பல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை வாங்கப் போகிறோம் என்று உலா வரும் செய்திகள் வெறும் வதந்தி என்று குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபற்றி அந்த அணி நிர்வாகத்தில் இடம் வகிக்கும் முக்கிய நபர் “சுரேஷ் ரெய்னாவை நாங்கள் வாங்கவில்லை. சொல்லப்போனால் அவரை வாங்குவதற்கான எண்ணம் கூட எங்களிடம் இல்லை” என கூறினார். இதனால் ஐபிஎல் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் மீண்டும் சோகம் அடைந்துள்ளார்கள்.

Advertisement