புஜாரா, ரஹானேவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? – கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படை

Rohit
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் இன்று துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது புதிய பயணத்தை தொடங்குகிறது.

INDvsSL

- Advertisement -

இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா போன்ற பல நட்சத்திர உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அடங்கிய இந்தியா திமுத் கருணாரத்னே தலைமையில் ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், குஷால் மெண்டிஸ் போன்ற தரமான வீரர்கள் அடங்கிய இலங்கையை சந்திக்க உள்ளது. ஆசியாவை சேர்ந்த டாப் 2 அணிகள் மோதும் இந்த தொடருக்காக இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புஜாரா – ரஹானேவுக்கு குட் பை:
முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் புஜாரா, அஜிங்கிய ரஹானே, ரிதிமான் சஹா, இஷாந்த் சர்மா ஆகிய மூத்த வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இதில் கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் தூண்களாக விளையாடி வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் சமீப காலங்களாக பெரிய அளவில் ரன்கள் குவிக்க தடுமாறி மோசமான பார்மில் தவிப்பதால் அவர்களை இந்திய அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.

Pujara

ஏற்கனவே 35 வயதை கடந்துவிட்ட இவர்களுக்கு கடந்த 2 வருடங்களாக வாய்ப்பளித்த போதிலும் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் கிடைத்த வாய்ப்பை வீண்டித்த காரணத்தால் சமீப காலங்களாக இந்தியா பெரிய பின்னடைவை சந்தித்து வந்தது. எனவே ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அடுத்த தலைமுறை இந்திய அணியை உருவாக்கும் வண்ணம் அவரை தேர்வு குழுவினர் கழட்டி விட்டுள்ளார்கள்.

- Advertisement -

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா:
சொல்லப்போனால் இனிவரும் காலங்களில் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இந்திய அணியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் புஜாரா – ரகானே ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதா என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலளித்துள்ளார். இதுபற்றி முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

rohith 6

“கடந்த காலங்களில் இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக செயல்படுவதற்கு புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் மிக மிக முக்கிய பங்காற்றியுள்ளார்கள். எனவே அவர்களின் மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பல ஆண்டுகால உழைப்பை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்போதைய நிலைமையில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு இந்திய அணியில் இடமில்லை என யாரும் எதையும் எழுதவில்லை. அவர்களின் மீது எங்களின் பார்வை இருந்து கொண்டே இருக்கும்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த 10 வருடங்களாக இந்திய மிடில் ஆர்டரில் தாங்கிப் பிடித்து வந்த இவர்கள் விராட் கோலி தலைமையில் இந்தியா பெற்ற பல சரித்திர வெற்றிகளில் மிக மிக முக்கிய பங்காற்றினார்கள் என்று கூறலாம். குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ செய்து சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் தனி ஒருவனாக 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த செட்டேஸ்வர் புஜாரா தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் வெற்றிக்கு மிக மிக முக்கிய பங்காற்றினார்.

Pujara

ரஞ்சி கோப்பையில் ரன்கள் அடிங்க:
அதேபோல் கடந்த பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்த அஜிங்கிய ரஹானே கடந்த 2020/21இல் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்தியா தவித்தபோது கேப்டன் பதவியேற்று வழி நடத்தினார். விராட் கோலி இல்லாத அந்த தருணத்தில் ஒயிட்வாஷ் நிச்சயம் என பல ஜாம்பவான்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அவர் 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து இந்தியாவிற்கு பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். இப்படி இந்தியாவின் வெற்றிகளில் நிறைய பங்காற்றியுள்ள இந்த இருவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடியவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இதுதான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இவர்களை மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் மும்பை மற்றும் சௌராஷ்ட்ரா ஆகிய அணிகளுக்காக விளையாடி வரும் ரகானே மற்றும் புஜாரா இதுவரை நடந்த 2 போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement