ஐ.பி.எல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இதுதான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

INDvsRSA
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஓர் அங்கமாக நடைபெறுகிறது. இந்த தொடரை கைப்பற்ற புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொகாலியில் முகாமிட்டு வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

IND-1

- Advertisement -

நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 எனத் தொடரை வென்று அசத்தியது. எனவே அதேபோலவே இந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் ரோஹித் சர்மா முழுநேர டெஸ்ட் கேப்டனாகவும் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

ஐபிஎல் திருவிழா :
வரும் மார்ச் 16ஆம் தேதியுடன் இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணம் நிறைவுக்கு வருகிறது. இந்த தொடரை முடித்துக் கொண்டு வரும் மார்ச் 26 ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் 2022 தொடரில் ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் விளையாட உள்ளார்கள். இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 2 மாதங்கள் இந்திய ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது.

ipl

குறிப்பாக வரும் மார்ச் 26ஆம் தேதியன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரானது வரும் மே 29ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் கோலாகலமாக நிறைவுக்கு வருகிறது.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க டி20 தொடர்:
அதை தொடர்ந்து சுமார் 10 நாட்கள் ஓய்வு பெறும் இந்திய அணியினர் அதன் பின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளார்கள். வரும் ஜூன் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க அணி இந்த டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடருக்கு பயிற்சி எடுத்து தயாராகும் வண்ணம் இந்த 2 அணிகளும் இந்த டி20 தொடரில் நேருக்கு நேர் மோத உள்ளன.

Chepauk

வரும் ஜூன் 9 ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடர் வரும் ஜூன் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் இந்தத் தொடர் எந்தெந்த மைதானங்களில் நடைபெற உள்ளது என்பது பற்றி அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.

- Advertisement -

சென்னையில் ஆரம்பம்:
இந்நிலையில் இந்த டி20 தொடரில் எந்தெந்த மைதானங்களில் நடைபெற உள்ளது என்பது பற்றிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் தலைநகரான சிங்காரச் சென்னையில் வரும் ஜூன் 9ஆம் தேதி துவங்கும் இதன் தொடர் அதன்பின் பெங்களூரு, நாக்பூர், ராஜ்கோட் மற்றும் டெல்லி ஆகிய முக்கிய நகரிலுள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக வரும் ஐபிஎல் முடிந்தபின் அறிவிக்கப்பட உள்ள இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஐ.சி.சி டி20 தரவரிசை : முன்னேற்றம் கண்ட ஷ்ரேயாஸ் ஐயர், பின்தங்கிய விராட் கோலி – விவரம் இதோ

மொத்தத்தில் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்த தொடர் நமது தமிழ்நாட்டின் சென்னையில் துவங்க உள்ளது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் டி20 தொடரின் அட்டவணை இதோ:
இந்தியா – தென்ஆப்பிரிக்கா, முதல் டி20, ஜூன் 9, இரவு 7 மணி, சென்னை.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா, 2வது டி20, ஜூன் 12, இரவு 7 மணி, பெங்களூரு.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா, 3வது டி20, ஜூன் 14, இரவு 7 மணி, நாக்பூர்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா, 4வது டி20, ஜூன் 17, இரவு 7 மணி, ராஜ்கோட்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா, 5வது டி20, ஜூன் 19, இரவு 7 மணி, டெல்லி.

Advertisement