ஐ.சி.சி டி20 தரவரிசை : முன்னேற்றம் கண்ட ஷ்ரேயாஸ் ஐயர், பின்தங்கிய விராட் கோலி – விவரம் இதோ

Shreyas-iyer
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களின் முடிவில் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மூன்று விதமான கிரிக்கெட்க்கும் அடுத்தடுத்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வரும் ஐசிசி நிர்வாகமானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிறகு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

shreyas 1

- Advertisement -

அதன்படி அந்த புதிய ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பல வீரர்கள் முன்னேற்றமும், பல வீரர்கள் இறக்கத்தையும் சந்தித்துள்ளனர். இந்திய அணியில் இருந்து எந்தெந்த வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரில் மூன்று போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலுமே ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து மொத்தம் 204 ரன்கள் குவித்த அவர் தொடர்நாயகன் விருதையும் வென்றிருந்தார். இதன் காரணமாக ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஏற்கனவே இருபத்தி ஏழாவது இடத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 9 இடங்கள் முன்னேறி 18-ஆவது இடத்திற்கு வந்துள்ளார். அவர் அடைந்த மிகச் சிறந்த இடமாக இந்த இடம் பார்க்கப்படுகிறது.

Kohli

எப்போதுமே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் டாப் 10-ல் இடம்பெற்று வந்த விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஏற்கனவே டாப் 10-ல் இருந்து வெளியேறி இருந்தார். இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரை அவர் முற்றிலுமாக ஓய்வு காரணமாக தவற விட்டதால் அவர் மேலும் சற்று பின்னடைவை சந்தித்து தற்போது 15வது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 805 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மற்றொரு தொடக்க வீரரான முஹம்மது ரிஸ்வான் 798 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அவர்கள் இருவரை தவிர இந்த டாப் 10-ல் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய வீரராக கே.எல் ராகுல் 646 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : 9 டீமும் கேப்டன் யாருன்னு சொல்லிட்டாங்க. ஆனா ஆர்.சி.பி டீம் மட்டும் இன்னும் சொல்லல – ஏன் தெரியுமா?

அவரை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் டாப் 10-ல் இடம் பிடிக்கவில்லை. அதேபோன்று பந்து வீச்சாளர்கள் தரவரிசையிலும் இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை என்பது ஒரு வருத்தமான விடயம் தான்.

Advertisement