9 டீமும் கேப்டன் யாருன்னு சொல்லிட்டாங்க. ஆனா ஆர்.சி.பி டீம் மட்டும் இன்னும் சொல்லல – ஏன் தெரியுமா?

rcbvsdc
- Advertisement -

இந்தியாவில் இந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி முதல் 15-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 9 அணிகளும் தங்கள் அணியின் கேப்டன்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆனால் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் தற்போது புதிய கேப்டன் இன்றி தவிக்கும் ஆர்சிபி அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் யார் என்ற தகவலை வெளியிடவில்லை.

RCB

- Advertisement -

இந்த ஆண்டிற்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக விராட் கோலி, ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோரை தக்க வைத்த பெங்களூர் அணியானது புதியதாக பல வீரர்களை அணியில் தேர்வு செய்தது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் ஷ்ரேயாஸ் அய்யர் அல்லது டேவிட் வார்னர் ஆகிய இருவரில் யாராவது வாங்கி அவரை அணியின் கேப்டனாக நியமிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் ஆர்சிபி அணி தினேஷ் கார்த்திக் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோரை வாங்கியுள்ளது. இந்த இருவருமே ஏற்கனவே கேப்டனாக இருந்த அனுபவம் உடையவர்கள் என்றாலும் மேக்ஸ்வெல் தான் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தனது திருமணம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை மேக்ஸ்வெல் தவறவிட இருக்கிறார்.

rcb

இதன் காரணமாக தற்போது தினேஷ் கார்த்திக் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் தான் கேப்டன்சி போட்டியில் உள்ளனர். இந்த மூவரில் யாரை கேப்டனாக தேர்வு செய்வது என்ற ஒரு சிறிய குழப்பத்தினால் தான் ஆர்சிபி அணி இதுவரை அதிகாரபூர்வமாக கேப்டனை வெளியிடவில்லை. ஆனாலும் இன்னும் சில நாட்களில் நிர்வாகத்தினர் முன்னாள் கேப்டனான விராட் கோலி இடமும் அணி வீரர்களிடம் ஒரு கலந்துரையாடலை நடத்திவிட்டு அந்த ஆலோசனைக்கு பிறகு இந்த ஆண்டிற்கான ஆர்சிபி அணியின் கேப்டன் யார் என்பதை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அன்று மட்டன் சாப்பிட்ட அவர் இன்று இந்தியாவையே பிட்டாக மாற்றியுள்ளார் – கோலியை பாராட்டிய சக வீரர்

அதன்படி இன்னும் ஒரு சில நாளில் வெளியாகப்போகும் அந்த அறிவிப்பில் நிச்சயம் டு பிளிசிஸ் தான் அதிகாரபூர்வமாக ஆர்.சி.பி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement