இந்தியாவை அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸை பாராட்டி விராட் கோலி தாமாக கொடுத்த பரிசு – ரசிகர்கள் நெகிழ்ச்சி

Virat Kohli Liton Das
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதில் 2007க்குப்பின் 2வது கோபியை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்று அரையிறுதிக்கு செல்ல தயாராகி வருகிறது.

முன்னதாக அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 64* (44) ரன்களும் கேஎல் ராகுல் 50 (32) ரன்களும் எடுத்ததால் 20 ஓவரில் 184/6 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய வங்கதேசத்துக்கு பவர் பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 21 பந்துகளில் அரை சதம் கடந்து 60 (27) ரன்கள் விளாசி மிரட்டலை கொடுத்தார். அவரது அதிரடியால் மழை வந்த போது 7 ஓவர்களில் 66/0 ரன்கள் எடுத்திருந்த வங்கதேசம் இந்தியாவை விட 17 ரன்கள் கூடுதலாக இருந்ததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

விராட் கோலியின் பரிசு:
ஆனால் மழை நின்ற பின் 16 ஓவரில் 151 ரன்கள் தேவை என்ற புதிய டிஎல்எஸ் விதிமுறை இலக்குடன் களமிறங்கிய வங்கதேசத்துக்கு அதிரடி காட்டிக்கொண்டிருந்த லிட்டன் தாஸை கேஎல் ராகுல் ரன் அவுட் செய்து பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதை பயன்படுத்திய இந்தியா அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் போன்ற முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்து த்ரில் வெற்றி பெற்றது. அந்த வகையில் அப்போட்டியில் வென்றாலும் இந்தியாவுக்கும் மரண பயத்தை காட்டிய லிட்டன் தாஸை ஏராளமான இந்திய ரசிகர்கள் வெளிப்படையாகவே பாராட்டினார்கள்.

இந்நிலையில் அப்போட்டியில் அவரது அந்த அபார ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய பேட் ஒன்றை லிட்டன் தாசுக்கு பரிசளித்ததாக வங்கதேச வாரிய இயக்குனர் ஜலால் யூனிஸ் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி முடிந்த பின் உணவு அருந்தும் அறையில் நாங்கள் அமர்ந்திருந்த போது விராட் கோலி எங்களிடம் வந்து அவருடைய பேட்டை லிட்டன் தாசுக்கு பரிசளித்தார். என்னை பொருத்த வரை அது லிட்டனுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் தருணமாகும்”

- Advertisement -

“லிட்டன் தாஸ் க்ளாஸ் பேட்ஸ்மேன். அவருடைய சிறப்பான ஷாட்களை அப்போட்டியில் நாங்கள் பார்த்தோம். அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரர். சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாட துவங்கியுள்ளார்” என்று கூறினார். பொதுவாக விராட் கோலியுடன் புகைப்படம் எடுப்பதற்கே நிறைய வெளிநாட்டு வீரர்கள் காத்துக் கிடப்பார்கள்.

இதையும் படிங்க: இப்போதான் நிம்மதியா தூங்குறேன், என்னுடைய கம்பேக் ஆட்டதுக்கு அவர் தான் காரணம் – கேஎல் ராகுல் உற்சாக பேச்சு

ஆனால் லிட்டன் தாஸ் ஆட்டத்தை பார்த்து வியந்த விராட் கோலி அதை மதித்து தாமாக நேரடியாக சென்று தாம் பயன்படுத்தும் பேட்டை இப்படி பரிசளித்துள்ளது வங்கதேச ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அத்துடன் அதை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு விளம்பரத்தை தேடாமல் சத்தமின்றி இப்படி ஒரு பரிசை கொடுத்துள்ள விராட் கோலியை இந்திய ரசிகர்களும் மனதார பாராட்டுகிறார்கள்.

Advertisement