இப்போதான் நிம்மதியா தூங்குறேன், என்னுடைய கம்பேக் ஆட்டதுக்கு அவர் தான் காரணம் – கேஎல் ராகுல் உற்சாக பேச்சு

Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 4வது போட்டியில் 64* ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் 50 (32) ரன்களை குவித்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸை ரன் அவுட் செய்த கேஎல் ராகுல் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

KL rahul Run Out

- Advertisement -

கடந்த 2019க்குப்பின் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி சிறப்பாக செயல்பட்டு ரோகித் சர்மாவுடன் நிரந்தரமாக களமிறங்கும் தொடக்க வீரராக அசத்திய அவர் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் சுயநலத்துடன் மெதுவாக விளையாடுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குறிப்பாக சமீபத்தில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய பின் ஜிம்பாப்வே தொடரிலும் ஆசிய கோப்பையிலும் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் இந்த உலகக் கோப்பையில் முதல் 3 போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

நிம்மதியா தூங்குறேன்:
அதனால் கோபமடைந்த ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை அரையிறுதி முதல் இப்போது வரை அழுத்தமான போட்டிகளில் சொதப்பும் அவர் கத்துக்குட்டிகளை அடித்து காலத்தை தள்ளி வருவதாக விமர்சித்ததுடன் அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தனர். இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் நிறைய ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ள அவர் இப்போது தான் நிம்மதியாக தூங்குவதாக கூறியுள்ளார்.

KL-Rahul-and-Kohli

அதை விட அப்போட்டிக்கு முன்பாக விராட் கோலியிடம் பெற்ற ஆலோசனைகள் தமக்கு உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தற்போது எனது உணர்ச்சிகள் நல்லபடியாக உள்ளது. இங்கே விளையாடுவதற்காக கடந்த உலகக் கோப்பையிலிருந்தே நாங்கள் தயாராகி வந்தோம். மேலும் நான் சிறப்பாக செயல்பட்டாலும் இல்லை என்றாலும் எங்களது அணி எப்போதுமே சமநிலையுடன் இருக்க முயற்சித்து வருகிறது. அதே சமயம் என்னுடைய அணி எனக்கு கொடுத்த வேலையை நான் சிறப்பாக செய்தால் நான் மிகவும் நிம்மதியாக தூங்குவேன். வங்கதேசத்துக்கு எதிரான போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் அதில் அனைவரும் பங்கேற்ற நினைத்தோம்”

- Advertisement -

“அந்த நாளில் முக்கிய பங்காற்ற எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் தங்களது பங்கை ஆற்றி வருகிறார்கள். அந்த போட்டிக்கு முன் விராட் கோலியிடம் நான் மனநிலை பற்றி விவாதித்தேன். இதற்கு முன் நாங்கள் ஆஸ்திரேலியாவில் வந்து விளையாடியிருந்தாலும் இம்முறை அமைக்கப்பட்டுள்ள பிட்ச்கள் மிகவும் சவாலாக இருக்கின்றன. ஆனாலும் விராட் கோலி இங்கே ரன்கள் குவிக்கிறார் என்றால் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று அர்த்தம். அதனால் சிறப்பாக செயல்படுவதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது போன்ற ஆலோசனைகளை அவரிடம் நான் கேட்டறிந்தேன்” என்று கூறினார்.

Rahul

மேலும் போட்டியை தலைகீழாக மாற்றிய லிட்டன் தாஸ் ரன் அவுட் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஃபீல்டிங் துறையில் அசத்துவதற்கு நாங்கள் எப்போதுமே கடினமாக பயிற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக வேகமாக நகர்ந்து குறி பார்த்து எறிவதில் நாங்கள் உழைத்து வருகிறோம். அதன் பயனாக அந்த பந்து நேராக ஸ்டம்பை அடித்தது” என்று மகிழ்ச்சியுடன் பேசினார். இப்படி புத்துணர்ச்சி அடைந்துள்ள ராகுல் அடுத்த வரும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் துணைக் கேப்டனாக இருக்கும் அவர் உலக கோப்பையை வெல்வதற்கு நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்றே கூறலாம்.

Advertisement