சச்சினை காப்பாத்துறதுக்காக இதை செய்றீங்களா.. பிசிசிஐ – அஜித் அகர்கரை விளாசும் விராட் கோலி ரசிகர்கள்.. காரணம் இதோ

Ajit Agarkar
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்து தாயகம் திரும்பியுள்ளது. இதைத்தொடர்ந்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 2 வெவ்வேறு இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலிரண்டு போட்டிகளில் பணிச்சுசமையை கருத்தில் கொண்டு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் 3வது போட்டியில் மீண்டும் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்க உள்ளது. மேலும் இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆஃப் ஸ்பின்னர் இல்லாத குறையை போக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

சச்சினை காப்பாற்ற:
இந்நிலையில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஓய்வெடுப்பார் என்று பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளதற்கு அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி ஏற்கனவே 25000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

மேலும் மொத்தமாக 77 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 47 சதங்கள் அடித்துள்ளார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள சச்சினை (49) முந்துவதற்கு இன்னும் 3 சதங்கள் மட்டுமே தேவைப்படுவதால் அதை விராட் கோலி எளிதில் முறியடிப்பதற்கு 100% வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சொல்லப்போனால் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி தற்போது மீண்டும் அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார். அப்படி இதே வேகத்தில் சென்றால் சச்சின் 47 சதங்கள் மட்டுமல்லாமல் 100 சதங்கள் உடைத்து விடுவார் என்ற காரணத்தால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர், ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை தொடர்ந்து தற்போதும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக அவருடைய ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: 2011 மேஜிக் வெற்றி முடிஞ்சு போன கதை.. 2023 உலக கோப்பைக்கு முன்பாக ரசிகர்களுக்கு தெம்பை ஊட்டிய.. கிங் கோலியின் பெட்டி

குறிப்பாக அஜித் அகர்கர், ரோஹித் சர்மா போன்ற மும்பையை சேர்ந்தவர்கள் மும்பையை சேர்ந்த சச்சினின் சாதனையை பாதுகாக்க இப்படி செய்வதாக விராட் கோலியின் ரசிகர்கள் கண்மூடித்தனமாக பேசுகின்றனர். அதற்கேற்றார் போல் 2011 – 2020 வரை 20 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடாத விராட் கோலி 2021 – 2023 காலகட்டத்தில் 21 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறாதது குறிப்பிடத்தக்கது.

Advertisement