எல்லாரும் அழிஞ்சுட்டு வராதா சொல்றாங்க ஆனா அது தான் உண்மையாக நம்மள சோதிக்கிற இடம் – விராட் கோலி பேட்டி

Virat Kohli MS Dhoni
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் 2011 போல வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துவுதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வருகிறது. இத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவது அவசியமாகும் என்றே சொல்லலாம். ஏனெனில் 2008 அண்டர்-19 உலக கோப்பையை வென்று ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 15 வருடங்களாக அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 275 போட்டிகளில் 12898 ரன்களை எடுத்துள்ளார்.

குறிப்பாக தம்முடைய குருவான சச்சினையே மிஞ்சி அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் அதற்கு 46 சதங்கள் அடித்துள்ளார். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (49) உலக சாதனையை விரைவில் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளில் எப்போதுமே எக்ஸ்ட்ரா சிறப்பாக அசத்தி வருகிறார் என்று சொல்லலாம்.

- Advertisement -

உண்மையான ஃபார்மட்:
முன்னதாக டி20 போட்டிகளின் வருகையால் ஒருநாள் போட்டிகளின் தரம் குறைந்து வருவதாகவும் நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். மேலும் பென் ஸ்டோக்ஸ் போன்ற சில நட்சத்திர வீரர்களும் பணத்திற்காக டி20 கிரிக்கெட்டிலும் தரத்தை நிரூபிப்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடுவதை தேர்ந்தெடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வத்தை காட்டாமல் ஓய்வும் பெறுகிறார்கள். அதனால் அழிந்து வரும் ஒருநாள் போட்டிகளை பேசாமல் நிறுத்தி விடலாம் என ரவி சாஸ்திரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அனைவரும் அழிந்து வருவதாக சொன்னாலும் ஒருநாள் போட்டிகள் தான் தமக்கு மிகவும் பிடித்தது என்று தெரிவிக்கும் விராட் கோலி அதுவே வீரர்களின் பல்வேறு திறமைகளை உண்மையாக சோதிக்கும் இடமாகவும் திகழ்வதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதை விரும்புகிறேன். மேலும் ஒருநாள் போட்டிகள் உங்களுடைய ஆட்டத்தை முழுவதுமாக சோதிக்கக்கூடிய இடம் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“குறிப்பாக அது டெக்னிக், பொறுமை, நுட்பம் அமைதி சூழ்நிலையை அறிந்து விளையாடுதல், பல்வேறு கட்டங்களில் வித்தியாசமாக விளையாடுவது போன்றவற்றில் உங்களை சோதிக்கிறது. எனவே பேட்ஸ்மேனை முழுமையாக சோதிக்கக்கூடிய ஒருநாள் போட்டிகள் தான் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அது சூழ்நிலைக்கேற்றார் போல் என்னுடைய அணியின் வெற்றிக்காக விளையாடும் சவாலை எனக்கு கொடுக்கிறது”

இதையும் படிங்க: தோனி பிளேயர்ஸ்ஸ க்ரூம் பாண்ணாரு. ஆனா விராட் கோலி தான் கம்ப்ளீட் பண்ணாரு – இஷாந்த் சர்மா வெளிப்படை

“நானும் அதில் சிறந்து விளங்க முயற்சிக்கிறேன். எனவே ஏற்கனவே சொன்னது போல் ஒருநாள் போட்டிகள் அடிக்கடி என்னுடைய பேட்டிங் போன்ற பல்வேறு அம்சங்களில் சோதிப்பதற்கு உதவுகிறது. அதனால் நான் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு எப்போதுமே விரும்புகிறேன் என்று கூறினார். அவர் கூறுவது போல டி20 கிரிக்கெட்டில் அசத்தும் சூரியகுமார் யாதவால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய சூழ்நிலையில் அசத்த முடியாத அளவுக்கு ஒருநாள் போட்டிகள் சோதிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement