தோனி பிளேயர்ஸ்ஸ க்ரூம் பாண்ணாரு. ஆனா விராட் கோலி தான் கம்ப்ளீட் பண்ணாரு – இஷாந்த் சர்மா வெளிப்படை

Ishant-Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான இஷாந்த் சர்மா இந்திய அணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்களையும், 14 டி20 போட்டியில் விளையாடி 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா கடந்த 2 ஆண்டுகளாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தோனியை விட விராட் கோலி தான் சிறந்த கேப்டனாக திகழ்ந்துள்ளார் என கூறி அவர் அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2007-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒயிட் பால் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

தோனிக்கு அடுத்து கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தோனியின் தலைமையில் பாஸ்ட் பவுலர்கள் கண்டறியப்பட்டு க்ரூம் செய்யப்பட்டாலும் விராட் கோலியின் தலைமையில் தான் அவர்கள் முழுமையான பேக்கேஜ்-ஆக மாறியதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

தோனி அணியின் கேப்டனாக இருந்தபோது முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் என பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கண்டறியப்பட்டு அவர்கள் முன்னேற்றம் அடைந்தார்கள். பந்துவீச்சாளர்களுக்கு இடையே டோனி ஒரு நல்ல கம்யூனிகேட்டராக இருந்தார். ஆனால் அதன் பிறகு விராட் கோலியின் தலைமையில் எல்லோருமே மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக உருவெடுத்தனர்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி ஜஸ்ப்ரீத் பும்ராவும் அணிக்குள் நுழைந்ததால் இந்திய அணி ஒரு கம்ப்ளீட்டான பேக்கேஜாக மாறியது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளிலும் சாதனை படைக்க துவங்கியது. அதோடு பந்துவீச்சாளர்களுக்கு ஆக்ரோஷமான முறையில் செயல்பட்டு எவ்வாறு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற தெளிவினையும் கோலி வழங்கி இருந்தார்.

இதையும் படிங்க : 40 வருட ஆசிய கோப்பை வரலாற்றில் அது மட்டும் நடக்கவே இல்ல, இப்போவாச்சும் நடக்குமா? என இந்தியா – பாக் ரசிகர்கள் ஏக்கம்

25 ரன்கள் விட்டுக் கொடுத்தால் கூட இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது போன்ற சில விதிமுறைகளை வகுத்து அவர்களிடம் இருந்த திறமையை வெளிக் கொணர்ந்தார். என்னை பொறுத்தவரை தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தான் சிறந்த கேப்டன் என்று கூறுவேன். ஏனெனில் விராட் கோலியின் தலைமையிலேயே இந்திய அணி மற்ற அணிகளுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் சிறந்த பந்துவீச்சார்களை கொண்ட அணியாக மாறியது என இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement