40 வருட ஆசிய கோப்பை வரலாற்றில் அது மட்டும் நடக்கவே இல்ல, இப்போவாச்சும் நடக்குமா? என இந்தியா – பாக் ரசிகர்கள் ஏக்கம்

IND vs PAK Asia Cup
- Advertisement -

ஆசிய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கோலாகலமாக துவங்குகிறது. விரைவில் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற அணிகள் தயாராகும் வகையில் இத்தொடர் இம்முறை இத்தொடர் 50 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது.

அத்துடன் இத்தொடரிலிருந்து தான் ஆசிய அணிகள் 2023 உலகக்கோப்பையில் விளையாடப் போகும் தங்களுடைய 15 பேர் கொண்ட இறுதிக்கட்ட அணியையும் தேர்வு செய்ய உள்ளன. முன்னதாக 1980களுக்கு பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற உலக அணிகளுக்கு சவாலை கொடுக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் தரமாக உருவெடுத்தன. அப்போது ஆசிய அணிகளின் நலனை பாதுகாப்பதற்காக ஆசிய கவுன்சிலும் உருவாக்கப்பட்டது.

- Advertisement -

இப்போவாச்சும் நடக்குமா:
அதை தொடர்ந்து உலக அணிகளுக்கு சவாலை கொடுக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆசிய அணிகளில் சிறந்த அணி எது என்பதை தீர்மானிப்பதற்காக கடந்த 1984இல் முதல் முறையாக நடத்தப்பட்ட ஆசிய கோப்பை ஒவ்வொரு 2 வருடத்திற்கும் நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போதிலிருந்து நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பையில் இதுவரை மொத்தம் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா ஆசிய கண்டத்தின் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து 6 கோப்பைகளை வென்றுள்ள தற்போதைய நடப்பு சாம்பியன் இலங்கை 2வது வெற்றிகரமான அணி அணியாக திகழ்கிறது. இவ்விரு அணிகளை தவிர்த்து பாகிஸ்தான் 2 கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என்ற அணிகள் இதுவரை ஆசிய கோப்பை வென்றதில்லை. அப்படி 1984இல் துவங்கி இதுவரை சுமார் 40 வருட வரலாறு கொண்ட இத்தொடரில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் ஒரு முறை கூட ஃபைனலில் மோதியதில்லை என்பது தனித்துவமான புள்ளிவிவரமாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஆம் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் இம்ரான் கான், வாசிம் அக்ரம், இன்சமாம், அப்ரிடி, பாபர் அசாம் மகத்தான வீரர்களைக் கொண்ட இவ்விரு நாடுகளும் இதுவரை ஒரு முறை கூட ஆசியக் கோப்பை வரலாற்றில் ஃபைனலில் விளையாடியதில்லை.  குறிப்பாக 1984இல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடராக நடைபெற்ற இத்தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

அதன் பின் 1986இல் இலங்கை – பாகிஸ்தான், 1988இல் இந்தியா – இலங்கை, 1990இல் இந்தியா – இலங்கை, 1995இல் இந்தியா – இலங்கை, 1997இல் இலங்கை – இந்தியா, 2000இல் பாகிஸ்தான் – இலங்கை, 20004இல் இலங்கை – இந்தியா, 2008இல் இலங்கை – இந்தியா, 2010இல் இலங்கை – இந்தியா, 2012இல் வங்கதேசம் – பாகிஸ்தான், 2014இல் பாகிஸ்தான் – இலங்கை, 2016இல் இந்தியா – வங்கதேசம், 2018இல் இந்தியா – வங்கதேசம், 2022இல் இலங்கை – பாகிஸ்தான் ஃபைனலில் மோதியுள்ளன.

இதையும் படிங்க: ஆசிய கண்டத்தின் ரசிகர்களுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்த அதை மாத்துங்க – ஆசிய கவுன்சிலுக்கு மனோஜ் திவாரி முக்கிய கோரிக்கை

குறிப்பாக கடந்த முறை இந்தியா – பாகிஸ்தான் மோதம் என்று எதிர்பார்க்கப்பட்ட போது உள்ளே புகுந்த இலங்கை ஃபைனலில் சேம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. எனவே இம்முறையாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஃபைனலில் மோதுமா என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement