ஆசிய கண்டத்தின் ரசிகர்களுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்த அதை மாத்துங்க – ஆசிய கவுன்சிலுக்கு மனோஜ் திவாரி முக்கிய கோரிக்கை

Manoj Tiwari
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வாரியங்களுக்கிடையே நிலவிய பல விவாதங்களை தாண்டி 2023 ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் ஒப்புதல் தெரிவித்தது. குறிப்பாக விரைவில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் இம்முறை இந்த ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் துவங்கும் 2023 ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன.

இருப்பினும் பாகிஸ்தானில் வெறும் 4 போட்டிகள் மட்டுமே நடைபெறும் நிலையில் ஃபைனல் உட்பட இந்தியா பங்கேற்கும் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற உள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தம்முடைய முதல் போட்டியில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கொழும்புவில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

மனோஜ் திவாரி ஏமாற்றம்:
அதைத்தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி கத்துக்குட்டியான நேபாளை தன்னுடைய 2வது போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது. அந்த வகையில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இத்தொடரின் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் வெற்றிகளை பெற்று ஃபைனலில் 8வது முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் ஆசிய கண்டத்தின் 6 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் கொண்டாடும் இத்தொடரில் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெறும் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் வெற்றிக் கோப்பை மிகவும் சுமாரான டிசைனில் இருப்பது தமக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“ஆசிய கோப்பையை பார்க்கும் போது இது ஒரு சாதாரண கோப்பை என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தொடருக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் அப்படி எதிர்பார்ப்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு நீங்கள் இதை காட்டுகிறீர்கள். இது இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல தற்போதைய ஆசிய கோப்பையின் வடிவம் மிகவும் சிறியதாகவும் சாதாரணமாகவும் புதுமையான அல்லது பிரத்தியேகமான டிசைனில் இல்லாமல் இருக்கிறது என்றால் மிகையாகாது.

இதையும் படிங்க: இப்டில்லாம் குழப்புனா 2023 உ.கோ ஜெயிக்க முடியாது, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஜாம்பவான் வீரர் மதன் லால் அறிவுரை

குறிப்பாக தலைப்பகுதியில் கிரீடம் போல் இருக்கும் அமைப்பை தவிர்த்து மற்றபடி இந்த கோப்பை மிகவும் சாதாரணமான வடிவத்திலேயே காணப்படுகிறது. ஆனால் 2023 கோப்பையில் களமிறங்கும் டாப் 10 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இலங்கை ஆகிய 5 அணிகள் இருக்கின்றன. அந்தளவுக்கு தரமான ஆசிய அணிகளின் சாம்பியன் யார் என்பதை தீர்மானித்து அதற்கு வழங்கப்படும் கோப்பை இன்னும் சிறப்பான தோற்றத்திலும் வடிவத்திலும் இருந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement