இப்டில்லாம் குழப்புனா 2023 உ.கோ ஜெயிக்க முடியாது, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஜாம்பவான் வீரர் மதன் லால் அறிவுரை

Madan Lal 2
- Advertisement -

ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. இருப்பினும் இந்த உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாடும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்னும் முழுமையாக குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதை சரி செய்ய 4வது ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாவிட்டாலும் பரவாயில்லை இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் திலக் வர்மாவை விளையாட வைக்கலாம், அனுபவமிக்க விராட் கோலியை விளையாட வைக்கலாம் என்பது போன்ற நிறைய கருத்துக்களை முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். அந்த நிலைமையில் தற்போதைய அணியில் தாம் உட்பட அனைவருமே 4, 5 போன்ற எவ்விதமான பேட்டிங் இடத்திலும் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடுவதற்கு தயாராக இருப்பதால் இது ஒரு பிரச்சனையே கிடையாது என கேப்டன் ரோகித் சர்மா நேற்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

குழப்பாதீங்க கேப்டன்:
இந்நிலையில் 2007 உலகக் கோப்பையில் தாறுமாறான மாற்றங்கள் செய்தது போல தயவு செய்து இம்முறை குருட்டுத்தனமான தைரியத்தில் பேட்டிங் வரிசையில் மாற்றங்களை ஏதும் செய்து விடாதீர்கள் என ரோகித் சர்மாவுக்கு 1983 உலக கோப்பையை வென்ற நட்சத்திரம் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ஏனெனில் அது போன்ற மாற்றங்கள் தோல்வியை கொடுக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“நீங்கள் நம்முடைய வீரர்களை அனைத்து இடத்திலும் விளையாடுவதற்கு தயாராக இருக்குமாறு சொன்னதாக கூறினீர்கள். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய இடங்களில் தான் விளையாட வேண்டும். எனவே இந்த ஆசிய மற்றும் உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமெனில் அதற்கு 4 முதல் 8 வரை களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் முக்கியமான மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்யக் கூடியவர்கள்”

- Advertisement -

“ஆனால் நீங்கள் அடிக்கடி பேட்டிங் வரிசையை மாற்றினால் நம்முடைய வீரர்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்காது. சூழ்நிலைக்கேற்றார் போல் ஒரு சில வீரர்களை நீங்கள் மாற்றலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஒவ்வொரு வீரருக்கும் நாம் எப்படி விளையாட வேண்டும் என்ற வேலையை தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் இது எந்த இடத்திலும் நீங்கள் களமிறங்கி வெற்றிகரமாக செயல்படுவதற்கு டி20 போட்டிகள் கிடையாது”

இதையும் படிங்க: 2023 ஆசிய கோப்பையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா – படைக்க வாய்ப்புள்ள 5 சாதனைகளின் பட்டியல், லிஸ்ட் இதோ

“மாறாக டாப் ஆர்டர் நல்ல துவக்கத்தை கொடுத்து மிடில் ஆர்டர் அதை வளர்க்கும் வகையில் விளையாட வேண்டும். அந்த நிலையில் எந்த இடத்திலும் விளையாடுவார்கள் என்று நம்முடைய கேப்டன் தெரிவித்தது எனக்கு வித்தியாசமாக தெரிகிறது. மேலும் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஆகியோர் குணமடைந்து ஆசிய கோப்பையில் விளையாடினால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமான அமையும்” என்று கூறினார்.

Advertisement