உலகக்கோப்பை போட்டிகளில் சங்கக்காரா, சாகிப் அல் ஹசன் ஆகியோரது சாதனையை சமன் செய்த – விராட் கோலி

Sanga-Virat-Shakib
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தலான பயணத்தை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இந்த உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தியிருந்த இந்திய அணியானது நேற்று அக்டோபர் 22-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரில் தங்களது தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 273 ரன்கள் குவிக்க பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக விராட் கோலி திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் நேற்றைய போட்டியில் 104 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 95 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்று வந்து ஆட்டம் இழந்தார். அவர் அடித்த இந்த 95 ரன்கள் மூலம் சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் குமார் சங்கக்காரா மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகமுறை 50+ ரன்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 21 முறை 50+ ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கும் வேளையில் இரண்டாவது இடத்தில் குமார் சங்ககாரா மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் உலகக்கோப்பை போட்டிகளில் 12 முறை 50+ ரன்கள் குவித்த வீரர்களாக இரண்டாம் இடத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க : ஜெயசூர்யாவை முந்திய கிங் கோலி.. ஐசிசி தொடர்களில் கெயில், சச்சின் போன்ற யாரும் செய்யாத உலக சாதனை

இந்நிலையில் நேற்று விராட் கோலி அடித்த 50 ரன்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 12 முறை 50+ ரன்களை அடித்த வீரராக தனது பெயரை அவர்களுடன் சமன் செய்துள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் சதம் அடிக்க கிடைத்த வாய்ப்பை இறுதி நேரத்தில் கோட்டை விட்ட விராட் கோலி நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரிலேயே சச்சினின் 49 சதங்களை சமன் செய்வதோடு அதனையும் கடந்து சாதிப்பார் என்று அனைவரும் அவரது பேட்டிங்கை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement