ஜெயசூர்யாவை முந்திய கிங் கோலி.. ஐசிசி தொடர்களில் கெயில், சச்சின் போன்ற யாரும் செய்யாத உலக சாதனை

Virat Kohli records 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டார்ல் மிச்சேல் சதமடித்து 103, ரச்சின் ரவீந்திரா 75 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அபாரமாக செயல்பட்ட முகமது ஷமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 46, கில் 26 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை அடுத்ததாக வந்த விராட் கோலி சிறப்பாக பயன்படுத்தி விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ஸ்ரேயாஸ் ஐயர் 33, கே.எல். ராகுல் 27, சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 8 பவுண்டரி 2 சிக்சருடன் சதத்தை நழுவ விட்ட போதிலும் 95 (104) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அவருடன் ஜடேஜா 39* ரன்கள் எடுத்ததால் 48 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா இத்தொடரில் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்து 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி தொடரில் நியூசிலாந்தை தோற்கடித்து அசத்தியது.

அதனால் லாக்கி பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தும் நியூசிலாந்து முதல் தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இந்த போட்டியில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்ட நியூசிலாந்துக்கு எதிராக சவாலான இலக்கை துரத்தும் போது மீண்டும் ஒருமுறை அசத்தலாக விளையாடிய விராட் கோலி தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் அழுத்தத்தை உடைத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

மேலும் இப்போட்டியில் அடித்த 95 ரன்கள் சேர்த்து இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 286 போட்டிகளில் 13427 ரன்களை ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 4வது வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யாவின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (ரன்கள்):
1. சச்சின் டெண்டுல்கர் : 18426
2. குமார் சங்ககாரா : 14234
3. ரிக்கி பாண்டிங் : 13704
4. விராட் கோலி : 13437*
5. சனாத் ஜெயசூர்யா : 13430

இதையும் படிங்க: தப்பு இந்திய மைதானங்கள் மேல.. இனிமேல் புதிய பாகிஸ்தான பாப்பீங்க.. இமாம் அதிரடி

அதை விட 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் கெயில், சங்ககாரா, சச்சின் போன்ற ஜாம்பவான்களை மிஞ்சியுள்ள அவர் 3000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல் (ரன்கள்):
1. விராட் கோலி : 3000*
2. கிறிஸ் கெயில் : 2942
3. குமார் சங்ககாரா : 2876
4. மகிலா ஜெயவர்தனே : 2858
5. ரோகித் சர்மா : 2733*
6. சச்சின் டெண்டுல்கர் : 2719

Advertisement