சச்சினின் வாழ்நாள் சாதனை சமன்.. உலக கோப்பையில் வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத தனித்துவ சாதனை படைத்த கிங் கோலி

Virat Kohli 49
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்து ஏற்கனவே செமி ஃபைனல் சுற்றுக்கும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள இவ்விரு அணிகள் சந்திக்கும் போட்டி அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 2 சிக்சருடன் 40 (24) ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த விராட் கோலி பிறந்தநாளில் நிதானத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் விளையாடிய சுப்மன் கில் 23 ரன்களில் மகாராஜ் சுழலில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

மாபெரும் சாதனை:
அப்போது வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து பெரிய ரன்கள் குவிக்கும் முனைப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் மிடில் ஓவர்கள் முழுவதும் தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு வளைந்து கொடுக்காமல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்து அசத்தினார்கள்.

அதில் 3வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 77 (87) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த கேஎல் ராகுல் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 ரன்களில் அவுட்டான அப்போதிலும் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய விராட் கோலி சதத்தை நெருங்கினார்.

- Advertisement -

அப்போது மறுபுறம் வந்த சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் 5 பவுண்டரியுடன் 22 (14) ரன்கள் குவித்து அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் உலக சாதனையை சமன் செய்தார்.

குறிப்பாக சச்சின் 452 இன்னிங்ஸில் அடித்த 49 சதங்களை விராட் கோலி 227 இன்னிங்ஸில் அடித்து இந்த உலக சாதனை சமன் செய்துள்ளார். அது போக உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் உட்பட வேறு எந்த இந்திய வீரரும் உலகக்கோப்பையில் பிறந்தநாளில் சதமடித்ததில்லை.

இதையும் படிங்க: சச்சினின் வாழ்நாள் சாதனை சமன்.. உலக கோப்பையில் வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத தனித்துவ சாதனை படைத்த கிங் கோலி

இறுதியில் விராட் கோலி 10 பவுண்டரியுடன் 101* (121) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 29* ரன்களும் விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 326/5 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, கேசவ் மகாராஜ், யான்சன், சம்சி தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement