25 ஆண்டுகள் கழித்து இந்திய அணி சார்பாக ஜோடியாக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ரோஹித் மற்றும் கில்

Rohit-and-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது தற்போது கொல்கத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரிய படுத்தியிருந்தார்.

ஏனெனில் இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக சேசிங் செய்து கொண்டிருக்கும் வேளையில் முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்ற சவாலுடன் இந்த முடிவை அவர் கையில் எடுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது முதலில் விளையாடி வரும் இந்திய அணியானது மிகச் சிறப்பாக ரன்களை குவித்து வருகிறது. தற்போது வரை 30 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள இந்திய அணி 179 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். அந்த வகையில் இன்றைய போட்டியில் 24 பந்துகளை சந்தித்த ரோஹித் 6 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 40 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதேவேளையில் சுப்மன் கில்லும் 24 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 23 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்து அசத்தலான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதன் மூலம் அவர்கள் படைத்த சாதனை யாதெனில் : இந்திய அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கி ஒரே ஆண்டில் அதிகபட்ச ரன்களை அடித்த துவக்க ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ஜிம்பாப்வே பவுலரை விட மோசம்.. முரட்டு அடி வாங்கும் ஹரிஷ் ரவூப் மோசமான உலக சாதனை

இந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜோடியாக 2019 ரன்களை குவித்துள்ளனர். இதற்கு முன்னதாக ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த துவக்க ஜோடியாக கடந்த 1998-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 2002 ரன்கள் அடிக்கப்பட்டது. அந்த சாதனையை தற்போது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement