ஜிம்பாப்வே பவுலரை விட மோசம்.. முரட்டு அடி வாங்கும் ஹரிஷ் ரவூப் மோசமான உலக சாதனை

Haris Rauf
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா 108, கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய பாகிஸ்தானுக்கு மழை வருவதை தெரிந்து வேகமாக அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்த துவக்க வீரர் பஃகார் ஜாமான் சரவெடியாக விளையாடிய 63 பந்துகளில் சதமடித்து 126* (81) ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் பாபர் அசாம் 66* ரன்கள் எடுத்ததால் 25.3 ஓவரில் பாகிஸ்தான் 200/1 ரன்கள் எடுத்த போது மழை வந்தது. அப்போது நியூசிலாந்தை விட 21 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்ததன் காரணமாக பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

மோசமான உலக சாதனை:
அதனால் 402 ரன்கள் அடித்தும் பரிதாபமாக தோல்வியை சந்தித்த நியூசிலாந்து செமி ஃபைனல் செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போல பாகிஸ்தானும் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வெல்வதுடன் நியூசிலாந்து அதனுடைய கடைசி போட்டியில் தோற்க வேண்டும் என்ற நிலைமையில் இருக்கிறது.

முன்னதாக அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்த பாகிஸ்தானுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரிஷ் ரவூப் மோசமாக பந்து வீசி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை எடுத்த போதிலும் 85 ரன்கள் வாரி வழங்கினார். அதன் வாயிலாக உலகக்கோப்பை ஒரு போட்டியில் மோசமான பந்து வீச்சை பதிவு செய்த பாகிஸ்தான் பவுலர் பரிதாபமான சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

இருப்பினும் அவரையும் மிஞ்சிய சாகின் அப்ரிடி 10 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 90 ரன்கள் வாரி வழங்கி அந்த சாதனையை அடுத்த அரை மணி நேரத்தில் தனதாக்கினார். ஆனாலும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை அடிக்கும் திறமையை கொண்டவர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்டும் ஹரிஷ் ரவூப் இந்த உலகக் கோப்பையில் ஆரம்பத்திலிருந்தே சுமாராக பந்து வீசி இதுவரை மொத்தம் 16 சிக்ஸர்களை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 4.3 ஓவரில் 50.. 6 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. ஏபிடி உலக சாதனையை சமன் செய்த ஹிட்மேன்.. இந்தியாவுக்கு மாஸ் துவக்கம்

இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் கொடுத்த பவுலர் என்ற ஜிம்பாப்வே பவுலரின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய மோசமான உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹரிஷ் ரவூப் (பாகிஸ்தான்) : 16*, 2023
2. திஷனே பன்யங்காரா (ஜிம்பாப்வே) : 15, 2015
3. யுஸ்வேந்திர சஹால் (இந்தியா) : 14, 2019
4. ரசித் கான் (ஆப்கானிஸ்தான்) : 14, 2019
5. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) : 13, 2015

Advertisement