இங்கிலாந்து போட்டியில் டக் அவுட்டானாலும்.. சச்சினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த விராட் கோலி

Virat Kohli 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ள இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறுவது 99% உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்துக்கு எதிராக 20 வருடங்களுக்கு முதல் முறையாக வெற்றிவாகை சூடியது அதே வேகத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியிலும் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா இதுவரை இத்தொடரில் தோற்காத ஒரே அணியாக மிரட்டி வருகிறது.

- Advertisement -

சாதனை சமன்:
முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை சமன் செய்தார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் 9 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 1 – 7 அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (தலா 34*) பரிதாப சாதனையை சமன் செய்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் ஏற்கனவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் உலகக் கோப்பையில் முதல் முறையாக இப்போட்டியில் தான் டக் அவுட்டானார் என்பது யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அமைந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் அந்த போட்டியில் ஃபீல்டிங் துறையில் சிறப்பாகவே செயல்பட்டு அவர் இந்தியாவின் வெற்றியில் ஒரு அங்கமாகவே இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த வெற்றியையும் சேர்த்து இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் 307 முறை இந்தியா பதிவு செய்த வெற்றிகளில் விராட் கோலியும் ஒரு அங்கமாக இருந்தது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பதிவு செய்து வெற்றிகளில் அதிக முறை அங்கமாக இருந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் தனித்துவமான ஆல் டைம் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 307*
1. சச்சின் டெண்டுல்கர் : 307
2. எம்எஸ் தோனி : 295
3. ரோஹித் சர்மா : 288*
4. யுவராஜ் சிங் : 227
5. ராகுல் டிராவிட் : 216

இதையும் படிங்க: அவரோட பார்ம் எப்போவும் மாறனதே இல்ல. அவர்தான் மிஸ்டர் வேர்லடுகப் – இர்பான் பதான் புகழாரம்

இந்த நிலைமையில் இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் நவம்பர் 2ஆம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது. அதில் 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் தெறிக்க விட்டு சாம்பியன் பட்டம் வென்றது போல் அப்போட்டியிலும் இலங்கையை வீழ்த்துவதற்கு இந்திய அணியினர் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement