அவரோட பார்ம் எப்போவும் மாறனதே இல்ல. அவர்தான் மிஸ்டர் வேர்லடுகப் – இர்பான் பதான் புகழாரம்

Irfan-Pathan
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக துவங்கிய வெற்றி பயணத்தை தற்போது அக்டோபர் 29-ஆம் தேதி கடைசியாக நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி வரை இந்திய அணி நீட்டித்துள்ளது. அதாவது இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி இந்து தொடரில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து என 6 அணிகளையும் தங்களது அசாத்தியமான செயல்பாட்டின் மூலம் வீழ்த்தி இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதோடு இனிவரும் போட்டிகளிலும் இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளையும் வீழ்த்தி லீக் சுற்று போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமலே அரையிறுதிக்கு செல்லும் அணியாகவும் இந்திய அணி பலம் வாய்ந்து காணப்படுகிறது.

- Advertisement -

மேலும் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த கோப்பையை 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு கைப்பற்றும் முனைப்புடனும் செயல்பட்டு வருவதால் தற்போது இந்திய அணியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய அணியின் பல்வேறு முன்னணி வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருக்கும் வேளையில் ஷர்துல் தாகூர் மட்டும் ஓரளவு சொதப்பலான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் இணைந்தார்.

அப்படி அணியில் இணைந்த அந்த போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்த தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 9 விக்கெடுகளை வீழ்த்தியுள்ள வேளையில் ஒட்டுமொத்தமாக ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் 14 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் முகமது ஷமி தான் “மிஸ்டர் வேர்ல்ட் கப்” பட்டத்திற்கு சரியானவராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : முகமது ஷமி ஒரு ஃபெராரி காரை போன்றவர் அவர் நிற்காமல் செல்லும் திறன் உடையவர். என்னை பொறுத்தவரை மிஸ்டர் வேர்ல்ட் கப் என்றால் அது முகமது ஷமி தான். ஏனெனில் உலகக் கோப்பை போட்டிகளில் அவர் படைத்திருக்கும் ரெக்கார்டுகளே அதற்கு சான்று.

இதையும் படிங்க : இந்தியா துவம்சம் பண்ணிட்டாங்க.. ஒன்டே மேட்ச்ல அதை ஆடுனா எப்படி ஜெய்ப்பிங்க.. இங்கிலாந்தை விமர்சித்த அக்தர்

நியூசிலாந்து இங்கிலாந்து போட்டி மட்டுமல்ல. இனி வரும் இலங்கை, தென்னாபிரிக்கா, நெதர்லாந்து போட்டியிலும் அவர் அசத்துவார் என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக்கோப்பை தொடரில் 2 போட்டியில் மட்டுமே விளையாடிய விளையாடிய ஷமி 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவே துவக்கத்திலிருந்து அவர் பும்ரா மற்றும் சிராஜுடன் இணைந்து இருந்தால் இன்னும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி அபாயகரமானதாக இருந்திருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement