இந்தியா துவம்சம் பண்ணிட்டாங்க.. ஒன்டே மேட்ச்ல அதை ஆடுனா எப்படி ஜெய்ப்பிங்க.. இங்கிலாந்தை விமர்சித்த அக்தர்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தங்களுடைய முதல் 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்து தடுமாறி வருகிறது. இத்தனைக்கும் பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற தரமான வீரர்கள் இருந்தும் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு வரும் அந்த அணி அடுத்தடுத்த தோல்விகளால் 99% லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் வெறும் 230 ரன்களை துரத்திய அந்த அணி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் முகமது ஷமி, பும்ரா ஆகிய பவுலர்களின் தரமான வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாத அந்த அணி வெறும் 129 ரன்களுக்கு சுருண்டு 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இங்கிலாந்தின் தவறு:
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை விளையாட நினைப்பதே இங்கிலாந்தின் தோல்விகளுக்கு காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக செயல்படுவதால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதையே பின்பற்றலாம் என்று இங்கிலாந்து தவறாக நினைப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மறுபுறம் அந்த தவறான அணுகுமுறையை பயன்படுத்தி இங்கிலாந்தை துவம்சம் செய்து இந்தியா படுதோல்வியை பரிசளித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தை மிகவும் மோசமாக இந்தியா தோற்கடித்தது. இங்கிலாந்து மிகவும் மோசமாக தோல்வியை சந்தித்தது. ஏனெனில் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் டி20 பிராண்டை கொண்டு வந்து விளையாட முயற்சிக்கின்றனர்”

- Advertisement -

“குறிப்பாக இன்னிங்ஸை எப்படி கட்டுவது, விக்கெட்டுகள் விழுந்தால் யார் பந்துகளுக்கு நிகரான ரன்களை எடுப்பது, யார் அதிரடியாக விளையாடுவது போன்ற திட்டங்கள் இங்கிலாந்திடம் இல்லை. இப்படி விளையாடி இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவதை பார்ப்பது எனக்கு சோகமாக அமைந்துள்ளது. பஸ்பால் எனப்படும் அதிரடி ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரலாம். ஆனால் நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதற்கு தகுந்த ஆட்டத்தை தான் வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலியின் 35 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ள – கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்

இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்கு தற்போது நடைபெறும் உலகக் கோப்பையின் புள்ளி பட்டியலில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளன. அந்த சூழ்நிலையில் தற்போது 10வது இடத்தில் தடுமாறும் இங்கிலாந்து எஞ்சிய போட்டிகளில் வென்று எப்படியாவது டாப் 7க்குள் நுழைந்தால் மட்டுமே சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement