விராட் கோலியின் 35 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ள – கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்

Kohli-Eden-Gardens
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் முதன்மை அணியாக பார்க்கப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும் என்கிற அடிப்படையில் அனைத்து அணிகளும் ஒன்பது லீக் போட்டிகளில் தற்போது விளையாடி வருகின்றன அந்த வகையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.

- Advertisement -

அந்தவகையில் இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து என ஆறு அணிகளையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. அடுத்ததாக இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. வரும் நவம்பர் 2-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி அதன் பிறகு நவம்பர் 5-ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தங்களது எட்டாவது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நவம்பர் 5-ஆம் தேதி இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தனது 35-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அவரது பிறந்தநாள் அன்று இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருப்பதால் போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானத்தில் விராட் கோலியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பல சிறப்பு ஏற்பாடுகளை பெங்கால் கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி நவம்பர் 5-ஆம் தேதி 35-வது பிறந்தநாளை கொண்டாடுவதால் அவரை சிறப்பிக்கும் விதமாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு வருகை தரும் 70 ஆயிரம் ரசிகர்களுக்கும் விராட் கோலியின் புகைப்படம் அமைந்த மாஸ்க் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் விராட் கோலியின் மாஸ்கினை அணிந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இருக்கின்றனர்.

இதையும் படிங்க : தொடர்ந்து சொதப்பும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா மிடில் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் கோரிக்கை

போட்டி முடிந்து அவருக்கான பிறந்தநாள் கேட்க்கும் வெட்டப்பட இருக்கிறது. அது குறித்த புகைப்படங்களை வெளியிட மாட்டோம் என்றும் அது விராட் கோலிக்கு சர்ப்ரைஸ் என்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியின் இடையே லேசர் ஷோ மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 5-ஆம் தேதி மைதானம் முழுவதும் விராட் கோலிக்காகவே ரசிகர்கள் நிரம்பி இருப்பார்கள் என்றும் அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக அங்கு கொண்டாடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement