தொடர்ந்து சொதப்பும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா மிடில் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் கோரிக்கை

Shreyas-Iyer
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆறு போட்டிகளிலுல் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளதோடு சேர்த்து அரையிறுதிக்கான வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

அதே வேளையில் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் முதன்மை அணியாக பார்க்கப்படும் இந்திய அணியானது தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக கட்டாயம் இந்திய அணியே இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் என்று பலரும் கூறியிருக்கின்றனர். இந்திய அணியில் தற்போது பல்வேறு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் ஏமாற்றம் அளிக்கும் ஒரே ஒரு வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 6 போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அது தவிர்த்து அனைத்து போட்டிகளிலுமே அவர் ஷார்ட் பிட்ச் பந்தில் எளிதாக தனது விக்கெட்டினை பறிகொடுத்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளை சந்தித்து 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் அவருக்கு பதிலாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷனை சேர்க்கலாம் என்பதே ரசிகர்கள் பலரது கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : பணத்துக்காக ஆடுவாரு.. அவ்ளோ தான் முடிஞ்சுன்னு சொன்னாங்க.. கிண்டல்கள் பற்றி பும்ரா உருக்கமான பதில்

ஏனெனில் இடது கை ஆட்டக்காரரான இவர் அதிரடியாக விளையாடுவது மட்டுமின்றி கூடுதலாக பேக்கப் விக்கெட் கீப்பராகவும் செயல்படக்கூடியவர் என்பதனால் அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement