ஒருநாள் கிரிக்கெட்டில் குமார் சங்கக்காராவின் மாபெரும் சாதனையை சமன் செய்த – விராட் கோலி

Kohli-and-Sangakkara
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடாத விராட் கோலி நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தார்.

இந்த போட்டியில் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி 61 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 56 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தாலும் விராட் கோலி சங்ககாராவின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் துவக்க வீரராக இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 50+ பிளஸ் ரன்களை அடித்த வீரராக இருக்கும் சங்கக்காரா (112) உடன் அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்காமல் சங்கக்காரா 112 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில் நேற்று விராட் கோலி அடித்த அரைசதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 112 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து சங்கக்காரா உடன் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை 50+ பிளஸ் ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட ரன்களை 145 முறை அடித்துள்ளார். அதேபோன்று அவருக்கு அடுத்ததாக 118-முறை 50 பிளஸ் ரன்களை அடித்து சங்கக்காரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : பேட்டிங்கில் விட்டாலும் பவுலிங்கில் இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சாதனையை நிகழ்த்திய – மேக்ஸ்வெல்

அதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விராட் கோலி 113 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். நேற்று நடைபெற்ற இந்த ராஜ்கோட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டிருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 47 சதங்களையும், 66 அரை சதங்களையும் அடித்துள்ளார். எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இன்னும் இரண்டு சதங்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினை (49) அவர் சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement