IND vs AUS : பேட்டிங்கில் விட்டாலும் பவுலிங்கில் இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சாதனையை நிகழ்த்திய – மேக்ஸ்வெல்

Maxwell
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஆறுதல் வெற்றி பெற்று அதே உத்வேகத்துடன் உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற கடைசி சர்வதேச போட்டியான இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் முதலில் விளையாடிய அவர்கள் ஐம்பது ஓவர்களின் முடிவில் 352 ரன்களை குவிக்க இந்த போட்டியில் பேட்டிங்கில் அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நான்கு பேரையும் வீழ்த்தி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மொத்தம் முழுவதாக 10 ஓவர்கள் வீசிய மேக்ஸ்வெல் 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக அவர் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மூன்றாவது வீரரான விராட் கோலி மற்றும் நான்காவது வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய முதல் நான்கு வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிகச் சிறப்பான சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளராக இந்திய மண்ணில் நான்கு விக்கெட் எடுத்த வீரர்களில் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை எடுத்த பவுலர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐசிசி உலக கோப்பை 2023 : டாப் அணிகளை அப்செட் செய்யுமா.. ஆப்கானிஸ்தான் அணியின் முழுமையான அலசல்

இந்த பட்டியில் டாம் ஹோகன் (4/33) முதல் இடத்திலும், மேக்ஸ்வெல் (4/40) இரண்டாவது இடத்திலும், மைக்கல் கிளார்க் (4/42) மூன்றாவது இடத்திலும், ஆடம் ஜம்பா (4/45) நான்காவது இடத்திலும், பிராடு ஹாக் (4/49) ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் சார்பாக அதிக முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இவர் நான்கு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நாலாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement