ஐசிசி உலக கோப்பை 2023 : டாப் அணிகளை அப்செட் செய்யுமா.. ஆப்கானிஸ்தான் அணியின் முழுமையான அலசல்

Afghanitan Team
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்திய மண்ணில் துவங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு சவாலாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகள் சவாலை கொடுத்து சாம்பியன் பட்டம் வெல்வதற்காக தயாராகியுள்ளன.

இருப்பினும் அந்த அணிகளுக்கு கடினத்தை கொடுத்து ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 10 வருடங்களாக விளையாடி வரும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை கண்டு தற்போது உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி:
அந்த அணியை பொறுத்த வரை பேட்டிங் துறையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் அதிரடியான துவக்க வீரர்களாக அறியப்படுகிறார்கள். மேலும் மிடில் ஆர்டரில் ரியஸ் ஹசன், நஜிபுல்லா ஜாட்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் நல்ல திறமையுடைய வீரர்களாக திகழ்கின்றனர். லோயர் மிடில் ஆர்டரில் முன்னாள் கேப்டன் முகமது நபி அனுபவம் மிகுந்தவராகவும் ஃபினிஷராகவும் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் தயாராக இருக்கிறார்.

அத்துடன் இக்ரம் அலிகில், ஓமர்சாய் ஆகியோர் ஓரளவு நல்ல ஆல் ரவுண்டர்களாக ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு போராட காத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் விட ரசித் கான் முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகிய 3 ஸ்பின்னர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சொல்லப்போனால் அந்த 3 வீரர்களால் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் டாப் அணிகளுக்கு நிகராக ஆப்கானிஸ்தானின் சுழல் பந்து வீச்சு துறை மிகவும் வலுவானதாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

அதே சமயம் வேகப்பந்து வீச்சு துறையில் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்-உல்-ஹக் ஆகிய வீரர்கள் ஆப்கானிஸ்தான் வெற்றிக்காக போராட தயராக இருக்கின்றனர். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய அந்த அணி டாப் அணிகளுக்கு சவாலை கொடுத்து உலகக் கோப்பையை வெல்லுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நாட்டுக்காக இதை கூட செய்யாத நீங்க தேவையில்.. தோனி, ரோஹித்தை பாத்து கத்துக்கோங்க – தமீம் இக்பாலை விமர்சித்த ஷாகிப்

அதே சமயம் அனைத்து துறைகளிலும் ஓரளவுக்கு நல்ல பலத்தை கொண்டுள்ள அந்த அணி நிச்சயமாக இத்தொடரில் ஏதேனும் சில டாப் அணிகளை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். எனவே கோப்பையை வெல்வது கடினம் என்றாலும் வளர்ந்து வரும் அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் இத்தொடரில் கணிசமான வெற்றிகளை பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதே பெரிய சாதனையாக இருக்கும் என்பதே க்ரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும்.

Advertisement