நாட்டுக்காக இதை கூட செய்யாத நீங்க தேவையில்ல.. தோனி, ரோஹித்தை பாத்து கத்துக்கோங்க – தமீம் இக்பாலை விமர்சித்த ஷாகிப்

Shakib Al hasan
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கு அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. அந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட வங்கதேச அணியில் நட்சத்திர அனுபவ வீரர் தமீம் இக்பால் தேர்வு செய்யப்படாதது நிறைய சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 15 வருடங்களாக விளையாடி வரும் தமீம் இக்பால் வங்கதேச அணியின் ஜாம்பவான் வீரராகவே அந்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

இருப்பினும் சமீப காலங்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் பாதியிலேயே திடீரென்று ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார். ஆனால் அடுத்த நாளே வங்கதேச பிரதமர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ஓய்வு முடிவை வாபஸ் பெற்ற அவர் அதன் பின்னும் குணமடையாததால் 2023 ஆசிய கோப்பையில் விளையாடவில்லை.

- Advertisement -

ரோஹித், தோனியை பாருங்க:
அந்த சூழ்நிலையில் உலகக் கோப்பையில் இருந்து தமீம் இக்பால் தான் தாமாக விளையாட விரும்பாமல் வெளியேறியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அணியின் நலனுக்காக 3, 4 போன்ற மிடில் ஆர்டரில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டும் அதை தமீம் இக்பால் செய்ய விரும்பவில்லை என கேப்டன் சாகிப் அல் ஹசன் விமர்சித்துள்ளார்.

மேலும் ரோகித் சர்மா போல அணியின் நலனுக்காக அனைத்து இடங்களிலும் விளையாடுவதற்கும் தோனி போல ஃபிட்டாக முயற்சியுங்கள் என்று அவரை விமர்சித்த சாகிப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவை பாருங்கள். 7வது விளையாடிய அவர் பின்னர் துவக்க வீரராக மாறி 10000 ரன்களை அடித்துள்ளார். அதே போல அணிக்காக ஒருவர் 3 – 4 ஆகிய இடங்களில் விளையாடுவது பெரிய பிரச்சனையா? இது குழந்தைத்தனமாகும்.

- Advertisement -

“அவர் என்னுடைய இடத்தில் நான் தான் விளையாடுவேன் மற்றவர்கள் விளையாடக்கூடாது என்று இருக்கிறார். ஆனால் முதலில் நீங்கள் அணியை பாருங்கள். குறிப்பாக நீங்கள் 100 – 200 ரன்கள் அடித்தும் அணி வெற்றி பெறாமல் போனால் அதில் எந்த வித்தியாசமும் இருக்காது. சொந்த சாதனைகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் சொந்த பெயருக்காகவும் புகழுக்காகவும் விளையாடுகிறீர்கள் நாட்டுக்காக விளையாடவில்லை”

இதையும் படிங்க: 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – டேல் ஸ்டெய்ன் ஓபன்டாக்

“மேலும் இங்கே பலரும் என்னுடைய கேப்டன்ஷிப் மற்றும் திறமை மீது சந்தேகப்படலாம். ஆனால் ஒரு ஃபிட்டாக இல்லாத வீரர் அணியில் இருந்தால் அது தேசத்தை ஏமாற்றுவது போலாகும் என்று அனைத்தையும் வென்ற எம்எஸ் தோனி ஒருமுறை கூறியிருக்கிறார். எனவே அதை தமீம் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். அத்துடன் கேன் வில்லியம்சன் போல நீங்கள் முதலிரண்டு போட்டியில் விளையாடவில்லை என்றால் பிரச்சனையில்லை. ஆனால் எந்த போட்டியில் விளையாடுவீர்கள் என்பது தெரியாத உங்களைப் போன்ற வீரர் எங்களுக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement