2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – டேல் ஸ்டெய்ன் ஓபன்டாக்

Steyn
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் முன்னணி 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அதோடு இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரானது துவங்குவதற்கு ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடப்போகும் இரண்டு அணிகள் எது? என்பது குறித்த கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இறுதி போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளை தேர்வு செய்வது மிகவும் கடினம். ஏனெனில் என் மனது முழுவதும் தென்னாப்பிரிக்க அணி இறுதி போட்டிக்கு வர வேண்டும் என்று தான் நினைக்கிறது.

அவர்கள் இறுதிப் போட்டிக்கு வந்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியில் விளையாடி வரும் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய மைதானங்களில் விளையாடி நல்ல அனுபவத்தினை பெற்றுள்ளனர். அந்த வகையில் டேவிட் மில்லர், கிளாசன், ரபாடா போன்றோர் இந்திய மண்ணில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று மேலும் சில வீரர்களும் நல்ல திறமையுடன் இருப்பதினால் அவர்கள் இறுதிப் போட்டியில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்தியா இறுதிப்போட்டியில் விளையாட ஒரு தகுதியான அணி. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியின் பலம் மற்றும் சொந்த மண்ணில் விளையாடுவது என அனைத்துமே இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. அதோடு இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்களின் தன்மையை வைத்து பார்க்கும் போது நிச்சயம் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடும். அதனால் இந்திய அணி முதன்மையாக நான் தேர்வு செய்கிறேன்.

இதையும் படிங்க : அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் யார் 2023 உ.கோ தொடரில் விளையாட வேண்டும்.. முரளிதரன் முக்கிய கருத்து

அதோடு இரண்டாவது அணியாக எனது மனம் முழுவதும் தென்னாப்பிரிக்க அணியின் மீது இருந்தாலும் இங்கிலாந்து தான் இந்திய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போதுள்ள இங்கிலாந்து அணியிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பான வீரர்கள் இருப்பதினால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளே இறுதிப் போட்டியில் விளையாடும் என ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement