அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் யார் 2023 உ.கோ தொடரில் விளையாட வேண்டும்.. முரளிதரன் முக்கிய கருத்து

Muttiah Muralitharan
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா 2023 ஆசிய கோப்பை தொடரிலும் வெற்றி வாகை சூடி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது. அதனால் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி முழுமையாக தயாராக இருக்கிறது என்றே சொல்லலாம்

இருப்பினும் உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் உள்ள வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஒரு ஆஃப் ஸ்பின்னரை தேர்வு செய்யாமல் தேர்வுக்குழு தவறு செய்து விட்டதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் ஆசிய கோப்பையில் காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானார்.

- Advertisement -

முரளிதரன் கருத்து:
அதில் 2 வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் தம்முடைய தரத்தையும் அனுபவத்தையும் காட்டிய அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். இதனால் உலகக்கோப்பை 11 அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதே போல 3வது போட்டியில் வாய்ப்பு பெற்ற வாஷிங்டன் சுந்தரும் உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் அக்சர் படேல் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் போனால் கண்டிப்பாக அஸ்வின் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தம்முடைய கருத்தை பதிவிட்டது பின்வருமாறு. “நான் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் கிடையாது”

- Advertisement -

“இருப்பினும் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவருமே சிறந்த கிரிக்கெட்டர்களாகவும் ஸ்பின்னர்களாகவும் இருக்கின்றனர். அதில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 15 பேர் அணியில் அக்சர் படேல் இடம் பிடித்துள்ளார். ஒருவேளை அவர் காயத்தால் வெளியேறினால் நிச்சயமாக அஸ்வின் விளையாடுவார் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் அஸ்வின் மற்றும் சுந்தரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளார்கள்”

இதையும் படிங்க: 2011 மாதிரி உ.கோ ஜெயிக்க.. தோனியின் அந்த சிம்பிளான ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க – இந்திய அணிக்கு சேவாக் முக்கிய அட்வைஸ்

“அதில் அஷ்வினுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அக்சர் பட்டேல் காயத்திலிருந்து குணமடையாமல் போனால் நிச்சயமாக அஸ்வின் கம்பேக் கொடுப்பார்” என்று கூறினார். முன்னதாக உலகக்கோப்பைக்கு முன் 100% அக்சர் பட்டேல் ஃபிட்டாக இல்லாமல் போகும் பட்சத்தில் அஸ்வின் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கரும் சமீபத்தில் அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement