- Advertisement -

வீடியோ : 40 மாதங்கள் 1205 நாட்கள் கேரியரின் கடைசி கண்டத்தை உடைத்த கிங் கோலி – பிரையன் லாராவை மிஞ்சி அபார சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றினாலும் 3வது போட்டியில் தோற்ற இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பிளாட்டான பிட்ச்சில் சிறப்பாக பேட்டிங் செய்து 480 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக உஸ்மான் கவஜா சதமடித்து 180 ரன்களும் கேமரூன் கிரீன் சதமடித்து 114 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த புஜாராவுடன் ஜோடி சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 2வது சதமடித்த சுப்மன் கில் கேஎல் ராகுலுக்கு பதிலாக தன்னை தேர்வு செய்தது சரி என்பதை நிரூபித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய புஜாரா 42 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த விராட் கோலியுடன் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 128 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அந்த நிலைமையில் இன்று துவங்கிய 4வது நாளில் அரை சதம் கடந்திருந்த விராட் கோலியுடன் இணைந்து தொடர்ந்து பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேஎஸ் பரத்துடன் கைகோர்த்து சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி சதத்தை நெருங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனாலும் அவருடன் 5வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎஸ் பரத் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் ரசிகர்களை ஏமாற்றாமல் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட விராட் கோலி கடுமையாக போராடி வெறும் 5 பவுண்டரியுடன் 3 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டார். கடைசியாக கடந்த 2019இல் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்திருந்த அவர் அதன் பின் பார்மை இழந்து தடுமாறியதால் இந்திய அணியிலிருந்து நீக்குமாறு நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 ஆசிய கோப்பையில் 1020 நாட்கள் கழித்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 1116 நாட்கள் கழித்து அடுத்தடுத்த சதங்களை அடித்திருந்தார்.

- Advertisement -

ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்காமல் இருந்து வந்த அவர் ஒரு வழியாக 14 மாதங்கள் 1205 நாட்கள் கழித்து அந்த கண்டத்தையும் தாண்டி 28வது சதத்தை விளாசி தன்னை கிளாஸ் நிறைந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும் இந்த 100 ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா சாதனையை தகர்த்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 6707 (114 இன்னிங்ஸ், 20 சதங்கள்)
2. விராட் கோலி : 4729* (104 இன்னிங்ஸ், 16 சதங்கள்)
3. பிரைன் லாரா : 4714 (108 இன்னிங்ஸ், 12 சதங்கள்)

இதையும் படிங்க: IND vs AUS : தலைமுறையில் ஒரு முறை தான் இந்த மாதிரி பிளேயர்ஸ் கிடைப்பாங்க – ஆஸி வீரரை மனதார பாராட்டிய அஷ்வின்

மேலும் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்கள் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கரை விட 14 இன்னிங்ஸ் குறைவாக இந்த 75 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். அதனால் தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்துள்ள அவரது ஆட்டத்தால் 400 ரன்கள் கடந்துள்ள இந்தியா இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

- Advertisement -
Published by