- Advertisement -
ஐ.பி.எல்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆப்பு ரெடி.. களமிறங்கும் அதிவேகப் புயல்.. மிரட்ட காத்திருக்கிறார் – மோர்னே மோர்கல் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தினை வகிக்கிறது. அதோடு இன்னும் அந்த அணிக்கு 6 போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் நான்கு வெற்றிகளை பெற்றால் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்யும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் லக்னோ அணி ஏப்ரல் 30-ஆம் தேதி அதன் சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்வதற்காக தற்போது லக்னோ அணியின் வீரர்கள் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் லக்னோ அணியின் முன்னணி இளம் வேகப்பந்து பேச்சாளரான மாயங்க் யாதவ் விளையாடுவதற்கு தகுதியாக உள்ளார் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் தான் அறிமுகமான முதல் இரண்டு போட்டிகளில் பஞ்சாப் மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையேயான அடுத்தடுத்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த மாயங்க் யாதவ் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தியிருந்தார். அதோடு நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேகமாக பந்து வீசிய பவுலர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் மாயங்க் யாதவ் குறித்த தகவலை வெளியிட்ட மோர்னே மோர்கல் கூறுகையில் : மாயங்க் யாதவ் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அண்மையில் நடைபெற்ற உடற்தகுதி சோதனைகளில் அவர் அனைத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். எனவே நிச்சயம் மும்பை அணிக்கெதிரான போட்டியில் அவர் விளையாட இருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எனக்கு அவர் தான் ஹெல்ப் பண்ணுவாரு.. போன மேட்ச்ல ஷாருக்கான் பேசுனாரு.. ஆட்டநாயகன் வருண் பேட்டி

அதேபோன்று லக்னோ அணியின் துணை பயிற்சியாளரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறுகையில் : மாயங்க் யாதவ் தற்போது தனது கம்பேக்கிற்காக தயாராகியுள்ளார். வலைப்பயிற்சியிலும் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அவர் தற்போது காயத்திலிருந்து மீண்டு முற்றிலுமாக பந்துவீசும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருப்பதால் நிச்சயம் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் அசத்துவார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -