- Advertisement -
ஐ.பி.எல்

இவரையா ஏலத்தில் எடுக்கல.. கங்குலியின் 14 வருட தனித்துவ சாதனையை நொறுக்கிய பில் சால்ட்.. புதிய சாதனை

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 47வது லீக் போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. ஏப்ரல் 29ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 20 ஓவரில் சுமாராக விளையாடிய 153/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லிக்கு ரிசப் பண்ட், பிரித்திவி ஷா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர்.

அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35* ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 68, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்து 16.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் டெல்லி சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

இவரையா எடுக்கல:
இதையும் சேர்த்து 9 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் 11 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் பயணத்தில் பின்னடைவை சந்தித்தது.

முன்னதாக 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏளத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 27 வயதாகும் துவக்க வீரர் பிலிப் சால்டை கொல்கத்தா உட்பட எந்த அணிகளுமே வாங்கவில்லை. அந்த நிலையில் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட மற்றொரு இங்கிலாந்து ஜேசன் ராய் தொடர் துவங்குவதற்கு முன்பாக திடீரென விலகினார். எனவே அவருக்கு பதிலாக பில் சாட்டை கொல்கத்தா நிர்வாகம் அடிப்படை விலைக்கு வாங்கியது.

- Advertisement -

அந்த வாய்ப்பில் இதுவரை 9 போட்டிகளில் 392* ரன்களை 180.65 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள பில் சால்ட் கொல்கத்தா அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக கொல்கத்தாவின் சொந்த ஊரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மட்டும் இந்த வருடம் அவர் 6 போட்டிகளில் 344* ரன்கள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சௌரவ் கங்குலியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு அவர் தான் ஹெல்ப் பண்ணுவாரு.. போன மேட்ச்ல ஷாருக்கான் பேசுனாரு.. ஆட்டநாயகன் வருண் பேட்டி

இதற்கு முன் 2010 சீசனில் கொல்கத்தா அணிக்காக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கங்குலி 7 இன்னிங்ஸில் 331 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அது போக இப்போட்டியில் முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் குவித்த பில் சால்ட் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கொல்கத்தா அணிக்காக பவர்பிளேவில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் 2017 சீசனில் பெங்களூருவுக்கு எதிரான ஒரு போட்டியில் சுனில் நரேன் 54 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -