IND vs AUS : தலைமுறையில் ஒரு முறை தான் இந்த மாதிரி பிளேயர்ஸ் கிடைப்பாங்க – ஆஸி வீரரை மனதார பாராட்டிய அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட ஆஸ்திரேலியா 3வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற அந்த அணி அகமதாபாத் நகரில் மார்ச் 9ஆம் தேதி துவங்கிய கடைசி போட்டியில் பிளாட்டான பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 480 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 18 ரன்களும் கேமரூன் க்ரீன் 124 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடி வரும் இந்தியாவுக்கு ரோகித் சர்மா 35, சுப்மன் கில் 128, புஜாரா 42 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்த நிலையில் 4வது நாளில் விராட் கோலி 90* ரன்கள் கடந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
முன்னதாக இந்த போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த கேமரூன் கிரீன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதமடித்து அசத்தினார். இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமாகி வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் காயத்தால் பங்கேற்கவில்லை.

அது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் இப்போட்டியில் குணமடைந்து களமிறங்கியதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அவர் தலைமுறைக்கு ஒருமுறை வரும் வீரரை போல் அடுத்த தலைமுறையில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நாயகனாக செயல்படுவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு (17.50 கோடி) விலை போன ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்துள்ள அவரது திறமையை பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்தியாவைச் சேர்ந்த நாங்கள் அவ்வாறு தான் அவருடைய திறமையை மதிப்பிட்டுள்ளோம். அவர் மிகச் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன். அவரைப் போன்ற உயரமுடையவருக்கு வேகம் சாதாரணமாக வரும். நல்ல பேட்டிங் யுக்தியையும் தெரிந்துள்ள அவர் சிறப்பாகப் பந்து வீசி ஃபீல்டிங் செய்வதிலும் அசத்துகிறார். அவரைப் போன்றவர் நாம் பேசும் தலைமுறைக்கு ஒரு முறை வரும் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார்”

“நாம் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்து வருகிறோம். இந்தியா முற்றிலும் மாறுபட்டது. நாங்கள் அவரைப் போன்ற வீரர்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியாது. எனவே இந்தியாவில் அவரைப் போன்றவர்கள் ஒன்று சிறப்பாக செயல்பட வேண்டும் அல்லது காணாமல் போக வேண்டும். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவரைப் போன்ற வீரர்களின் இடத்துக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே கேமரூன் கிரீன் ஒரு அற்புதமான வீரராக வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : அவ்ளோ ஈஸியா ஒன்னும் இல்ல. தனது சதம் குறித்து பேசிய சுப்மன் கில் – விவரம் இதோ

அவர் கூறுவது போல தற்போது 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள கேமரூன் கிரீன் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து ஒரு இன்னிங்க்ஸில் 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஒருவேளை போட்டி மிகுந்த இந்தியாவில் பிறந்திருந்தால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று ஜொலிப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கும் என்று தெரிவிக்கும் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து அற்புதமான வீரராக உருவெடுப்பதற்கான ஆதரவு கிடைக்கும் என்று நம்புவதாக பாராட்டியுள்ளார்.

Advertisement