IND vs AUS : அவ்ளோ ஈஸியா ஒன்னும் இல்ல. தனது சதம் குறித்து பேசிய சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்திருந்தது.

Rohit 1

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 194 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை அடித்து அசத்தினார். அதோடு மொத்தம் 235 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 128 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த 2023 ஆம் ஆண்டு பிறந்து சுப்மன் கில் அடிக்கும் ஐந்தாவது சர்வதேச சதம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் சதமும், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு சதம் ஆகியவற்றை ஒருநாள் போட்டிகளில் அடித்திருந்தார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது தனது முதல் டி20 சதத்தையும் அடித்து முடித்தார்.

Shubman Gill 1

தற்போது ஆஸ்திரேலிய தொடரிலும் அவரது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் இந்த மூன்று மாத இடைவெளியிலேயே அவர் 5 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் : நான் செட் ஆனவுடன் நிறைய நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

- Advertisement -

அதனால் என்னை நிதானப்படுத்தியும் வைத்துக் கொண்டேன். அதேபோன்று எப்பொழுதுமே நான் செட் ஆனவுடன் பெரிய ஷாட்டை அடிக்க முயற்சிப்பேன். அதுவே என்னுடைய இயல்பான ஆட்டம். என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான் ஆட்டமிழந்தால் பரவாயில்லை என்றுதான் எனக்கு தோன்றும். அந்த வகையில் இந்த போட்டியில் செட் ஆனதால் மிகச் சிறப்பாக என்னால் விளையாட முடிந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : முதல் இன்னிங்சில் 35 ரன்கள் அடித்ததன் மூலம் மெகா சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

ஆனாலும் இது போன்ற மைதானங்களில் பேட்டிங் அவ்வளவு எளிது கிடையாது. இந்த அகமதாபாத் ஆடுகள மைதானம் சரளமாக ரன்களை குவிக்க கடினமான ஒரு மைதானம். இது போன்ற மைதானத்தில் நம் மீது அழுத்தம் கொடுக்காமல் சற்று கவனமாக விளையாட வேண்டியது அவசியம். இதுபோன்ற சற்று சவாலான மைதானங்களில் நேர்மறையான சிந்தனையுடன் விளையாட வேண்டும் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement