IND vs AUS : முதல் இன்னிங்சில் 35 ரன்கள் அடித்ததன் மூலம் மெகா சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 58 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த 35 ரன்கள் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றினையும் இந்திய அணி சார்பாக நிகழ்த்தியுள்ளார்.

Rohit 1

அந்த வகையில் இந்த முதலாவது இன்னிங்ஸில் 35 ரன்கள் அடித்த ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 17,000 ரன்களை பூர்த்தி செய்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.

- Advertisement -

இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, எம்.எஸ் தோனி போன்றோர் 17,000 ரன்களை எட்டியிருந்த வேளையில் தற்போது ஆறாவது வீரராக இந்த சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். ரோகித் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 241 நாள் போட்டிகளில் விளையாடி 9782 ரன்களை அடித்துள்ளார்.

Rohith-2

அதேபோன்று 148 டி20 போட்டிகளில் விளையாடி 3853 ரன்களையும், 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3379 ரன்களையும் அடித்துள்ளார். இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 30 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்பது சதங்களும், டி20 கிரிக்கெட்டில் நான்கு சதங்களையும் அவர் அடித்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முன்னாள் இந்திய வீரரான சேவாக்கின் பெயரும் இருக்க வேண்டியது. ஏனெனில் சேவாக் சர்வதேச கிரிக்கெட்டில் 17,753 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனாலும் அவரது பெயர் இந்த பட்டியலில் இடம் பெறாமல் போனதற்கு காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : சேப்பாக்கம் கோட்டையில் யாராலும் அசைக்க முடியாது, அவர கடைசியா பாக்க போறோம் – சிஎஸ்கே பற்றி ஹைடன்

வர் இந்திய அணிக்காக 16,892 ரன்கள் அடித்துள்ளார். அவருக்கான மீதமுள்ள ரன்கள் ஐசிசி மற்றும் ஆசியா தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்காக பொதுவாக விளையாடிய போட்டிகளில் வந்தது என்பதால் அது மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement