எனக்கு அப்றம் இந்தியாவோட அடுத்த தலைமுறை அவர் தான் – இளம் வீரரை மீண்டும் பாராட்டிய விராட் கோலி

kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்படும் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் 13 போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவு செய்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அந்த அணிக்கு இளம் வீரர் சுப்மன் கில் 483 ரன்கள் குவித்து பேட்டிங் துறையில் முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்லும் அளவுக்கு முக்கிய பங்காற்றி அசத்திய நிலையில் இந்த வருடம் அதையும் மிஞ்சி 576* ரன்கள் குவித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

முன்னதாக இந்தியா வென்ற கடந்த 2018 அண்டர்-19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மறக்க முடியாத 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்தால் வெளியேறிய அவர் 2022 ஐபிஎல் சீசனில் அசத்தலாக செயல்பட்டு மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

இந்தியாவின் வருங்காலாம்:
அதே வேகத்தில் கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த அவர் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சதமும் ஒருநாள் தொடரில் இரட்டை சதமும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சதமும் விளாசினார். அதனால் ஒரே காலண்டர் வருடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை ஆல் ஏரியாவிலும் சொல்லி அடிக்கும் கில்லியாக தொடர்ந்து பெரிய ரன்களை குவித்து வெற்றிகளில் பங்காற்றி வருவதால் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் இதர வீரர்கள் தடுமாறிய பிட்ச்சில் தனது முதல் ஐபிஎல் சதமடித்த 101 (58) ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றிய அவர் குஜராத்துக்காக 1000 ரன்கள் மற்றும் சதமடித்த முதல் வீரராக இரட்டை சாதனைகளையும் படைத்தார். இந்நிலையில் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை என தற்போதைய தலைமுறையின் நாயகனாக இருக்கும் விராட் கோலி பாராட்டியுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“சாத்தியமான திறமை இருக்கும் இடத்தில் அங்கே கில் இருக்கிறார். இங்கிருந்து சென்று அடுத்த தலைமுறையை தலைமை தாங்கி வழி நடத்துங்கள். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் சுப்மன் கில்” என்று பாராட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கடந்த நியூசிலாந்து தொடரில் சதமடித்த போது எதிர்ப்புறம் நின்று பாராட்டிய விராட் கோலி போட்டியின் முடிவில் இதே போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வருங்காலம் இங்கே இருக்கிறது. சுப்மன் கில்” என்று மனதார பாராட்டினார். அந்த வகையில் தற்போது 3 வகையான இந்திய அணியின் பேட்டிங் துறையிலும் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி தமக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் தான் வருங்காலம் என்று 2வது முறையாக பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:5 வருசமாகியும் இன்னுமா உங்க மண்டைக்குள் தோனி ஓடுறாரு? வீடியோவுடன் வந்த பீட்டர்சனை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

அவரை தவிர்த்து வேறு யாரையும் இதுவரை விராட் கோலி இப்படி பாராட்டியதில்லை. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட்டின் வருங்காலமாக சுப்மன் கில் இருப்பார் என்றே சொல்லலாம். அத்துடன் சிறுவயதில் பார்த்து வளர்ந்தது முதல் இப்போது வரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியவர் தான் தம்முடைய ரோல் மாடல்கள் என்றும் சுப்மன் கில் சமீபத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement