5 வருசமாகியும் இன்னுமா உங்க மண்டைக்குள் தோனி ஓடுறாரு? வீடியோவுடன் வந்த பீட்டர்சனை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

Kevin Pieterson
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து இன்றைய அணியில் இருக்கும் பல தரமான வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பளித்து வளர்த்த மகத்தான கேப்டனாகவும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்யும் விக்கெட் கீப்பராகவும் தோற்க வேண்டிய நிறைய போட்டிகளில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். மேலும் பொதுவாகவே யாருமே நினைக்காத வகையில் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய அவர் பல தருணங்களில் செய்தியாளர்கள் அல்லது முன்னாள் வீரர்களுக்கு தமக்கே உரித்தான ஸ்டைலில் நேருக்கு நேராக பதில் கொடுக்கும் சாதுரியத்தை கொண்டுள்ளார்.

குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்கும் என்று கட்டுரை எழுதியிருந்த ரவி சாஸ்திரிக்கு வெற்றி பெற்ற பின் தமது தலைமையிலான இளம் படை உங்களது கணிப்பை பொய்யாக்கியதாக அவரிடம் நேருக்கு நேராக தோனி தெரிவித்தது யாராலும் மறக்க முடியாது. அந்த வரிசையில் கடந்த 2017 ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடிய தோனியிடம் “உங்களை விட நான் சிறந்த கோல்ஃப் வீரர்” என்பதை தெரிவிக்குமாறு மனோஜ் திவாரியிடம் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் நேரலையில் சொன்னார்.

- Advertisement -

வாடகை இல்லாமல்:
அதை மனோஜ் திவாரி தெரிவித்த போது ஒரு நொடி கூட தாமதிக்காத தோனி “பீட்டர்சன் தான் என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்” என்று மாஸ் பதிலடி கொடுத்தார். அதாவது கடந்த 2011 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விக்கெட் கிடைக்காமல் இந்தியா தடுமாறி கொண்டிருந்த போது ராகுல் டிராவிட்டை கீப்பிங் செய்யுமாறு கேட்ட தோனி அரிதாக பந்து வீசினார். அப்போது கெவின் பீட்டர்சன் எட்ஜ் கொடுத்ததாக உணர்ந்த தோனி தலைமையிலான இந்தியா அவுட் கேட்டதால் நடுவர் பில்லி பௌடன் அவுட் வழங்கினார்.

இருப்பினும் அதை ரிவ்யூ எடுத்த போது அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்ததால் உண்மையாகவே தோனியின் முதல் விக்கெட்டாக பீட்டர்சன் பதிவாகாமல் போனார். ஆனால் டிஆர்எஸ் இல்லாத காலங்களில் நடுவர்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்பதை மனதில் கொண்ட தோனி அவரை தம்முடைய முதல் விக்கட்டாக கருதி அந்த முக்கிய தருணத்தில் மாஸ் பதிலடி கொடுத்தார். பொதுவாகவே தோனி ஒன்று செய்தாலோ சொன்னாலும் அது மிகவும் பிரபலமாகி அனைவரது மனதிலும் ஆழமாக பதிந்து விடும்.

- Advertisement -

அந்த வகையில் தோனி சொன்னதால் பீட்டர்சன் தான் அவருடைய முதல் டெஸ்ட் விக்கெட் என்று பெரும்பாலானவர்கள் நம்பினர். இந்நிலையில் அந்த நிகழ்வு நடந்து 5 வருடங்கள் கடந்தும் தோனி தம்முடைய முதல் விக்கெட் இல்லை என்பதை அனைவருக்கும் நிரூபிப்பதற்காக வீடியோ ஆதாரத்தை தேடிக் கொண்டிருப்பதாக நேற்று காலை ட்விட்டரில் பதிவிட்டார். குறிப்பாக தாம் தோனியின் விக்கெட் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பதை உடைப்பதற்காகவே அந்த வீடியோவை தேடுவதாக தெரிவித்த அவர் தமக்கு உதவுமாறு ரசிகர்களிடமும் கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து அந்த போட்டியை ஒளிபரப்பிய ஸ்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நேரடியாக பேசி அந்த குறிப்பிட்ட விக்கெட் சம்பந்தமான வீடியோவை வாங்கிய பீட்டர்சன் தனது ட்விட்டரில் “அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் இது தான் ஆதாரம். நான் தோனியின் முதல் விக்கெட் அல்ல. இருப்பினும் அவர் சிறப்பாக பந்து வீசினார்” என்று கலாய்க்கும் வகையில் மீண்டும் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதை பார்த்த இந்திய ரசிகர்கள் விளையாட்டுக்கு வம்பிழுத்த உங்களுக்கு விளையாட்டு போக்கிலேயே தோனி கொடுத்த பதிலடி இன்னுமா உங்களது மனதிற்குள் மண்டைக்குள்ளும் ஓடுகிறதா? என்று கலாய்க்கும் வகையில் பதிலளிக்கின்றனர்.

இதையும் படிங்க:LSG vs MI : கடைசி ஓவரில் மிரட்டிய லக்னோ பவுலர் – மிரட்டல் ஓப்பனிங் பெற்ற மும்பையை சாய்த்தது எப்படி? பிளே ஆஃப் சான்ஸ் யாருக்கு

அத்துடன் அந்த சமயத்தில் நடுவர் பில்லி பௌடன் கையை உயர்த்தும் அளவுக்கு தோனி உங்களை அவுட்டாக்கியது உண்மை தான் இருப்பினும் டிஆர்எஸ் காரணமாக நீங்கள் தப்பித்து விட்டீர்கள் என்றும் ரசிகர்கள் அவரை கலாய்கின்றனர். மேலும் தோனியிடம் தப்பினாலும் அவருடைய சிஷ்யனான விராட் கோலி முதல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே வீசிய ஒயிட் பந்தில் நீங்கள் தான் முதல் விக்கெட் என்பதை விடாதீர்கள் என்றும் ரசிகர்கள் கலாய்கின்றனர்.

Advertisement