
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மார்ச் இரண்டாம் தேதியான இன்று துபாய் மைதானத்தில் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டமானது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி போட்டியான இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி வரும் இந்திய அணி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது அசத்தலான பார்ட்னர்ஷிப் மூலம் சிறப்பான ஆட்டத்தை செயல்படுத்தி வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது தனது 300-வது சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராத் கோலி 14 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்திருந்த வேளையில் கிளென் பிலிப்ஸ் பிடித்த அசத்தலான கேட்சின் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த போட்டியில் அவர் 11 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தாலும் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நிகழ்த்தாத சாதனையை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இன்றைய போட்டியின் மூலம் தனது 300-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்த விராட் கோலி ஏற்கனவே 123 டெஸ்ட் போட்டிகளிலும், 125 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
உலகின் எந்த ஒரு வீரரும் இதுவரை 300 ஒருநாள் போட்டிகள் 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது கிடையாது. அந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரராக விராத் கோலி மாறியுள்ளார். கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவை அடக்க இதான் ஒரே வழி.. உங்க வீரர்களை அனுப்பாதீங்க.. வெளிநாடுகளுக்கு இன்சமாம் கோரிக்கை
ஏற்கனவே கடந்த சில தொடர்காளாக பாரமின்றி தவித்து வந்த விராட் கோலி கடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தான் சதம் அடித்து பார்முக்கு திரும்பியிருந்தார். இந்த நியூசிலாந்து போட்டியில் அவர் விரைவில் ஆட்டமிழந்து இருந்தாலும் நிச்சயம் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அவர் அசத்துவார் என்று நம்பலாம்.