
தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவரது தொடர்ச்சியான ரன் குவிக்கும் திறனை பார்த்த இந்திய அணியின் நிர்வாகமும் கடந்த 2023-ஆம் ஆண்டு அவருக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கியது. அதேபோன்று கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு டி20 போட்டியில் பங்கேற்றிருந்த சாய் சுதர்சன் கடந்த 2025-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி மூன்றாவது இடத்தில் விளையாடும் வீரராக இருந்து வருகிறார்.
டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை நிரந்தர இடத்தை பிடித்துள்ள அவர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் அறிமுகமாகி இருந்தாலும் தொடர் வாய்ப்புகள் பெறாமல் தனது இடத்திற்காக காத்திருக்கிறார். இவ்வேளையில் எதிர்வரும் காலத்தில் மூன்று வகையான இந்திய அணியிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் தனது கரியரில் தான் கடந்து வந்த பாதைகள் குறித்தும் சில கருத்துக்களை சாய் சுதர்சன் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தமிழகத்தைச் சேர்ந்த வீரர் என்கிற வகையில் நான் சி.எஸ்.கே அணியை பார்த்து தான் வளர்ந்தேன். பலமுறை சி.எஸ்.கே அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒரு சிறப்பான விடயம். நம்முடைய ஹோம் கிரவுண்டில் விளையாடுவது நிச்சயம் மகிழ்ச்சியை தரும். அதிலும் குறிப்பாக சி.எஸ்.கே அணிக்காக இந்த மைதானத்தின் விளையாட வேண்டும் என்ற ஆசையும் என்னிடம் இருந்துள்ளது.
ஏனெனில் சி.எஸ்.கே வீரர்கள் பஸ் செல்லும் வழியில் தான் என்னுடைய பள்ளி இருந்தது. அப்போது அந்த பஸ் பின்னாடியே போன அனுபவமும் என்னிடம் இருக்கிறது. ஐபிஎல் விளையாடும் போது சீனியர் வீரர்கள் என்னை வாழ்த்தியது இன்றளவும் மறக்க முடியாத நினைவுகளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருமுறை நான் சி.எஸ்.கே அணிக்கு எதிராக சதம் அடித்ததற்கு பிறகு தோனியை சென்று சந்தித்தேன்.
இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மா வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைய காத்திருக்கும் வாய்ப்பு – வரலாறு படைப்பாரா?
அப்போது அவர் என்னை பார்த்ததும் “நீ ஏன் என்கிட்ட பேச வந்திருக்க? நீ நல்லா தானே விளையாடிட்டு இருக்கேன்னு” சொன்னாரு. அதேபோன்று விராட் கோலி கடந்த கிரேட் சீசன்னு பாராட்டி இருந்தாரு. அதேபோன்று பும்ரா கடந்த ஆண்டு என் தோளில் தட்டி கொடுத்து கிரேட் சீசன்னு பாராட்டுயிருந்தார். இப்படி சீனியர் வீரராகள் என்னை வாழ்த்தியது எல்லாம் சிறப்பான தருணங்களாக இருந்ததாகவும் சாய் சுதர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.