- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி, ரோஹித் சர்மா வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைய காத்திருக்கும் வாய்ப்பு – வரலாறு படைப்பாரா?

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது. முதல் முறையாக இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ் முதல் தொடரிலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் இனிவரும் தொடர்களில் சிறப்பாக செயல்படுவார் என்கிற ஆதரவும் அவருக்கு இருந்து வருகிறது.

இங்கிலாந்து மண்ணில் சாதிப்பாரா ஷ்ரேயாஸ் ஐயர் :

இவ்வேளையில் அயர்லாந்து தொடரை முடித்த கையோடு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 1-ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இந்த தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயரே இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது முக்கிய சாதனை ஒன்றினை இங்கிலாந்து மண்ணில் சமன் செய்ய ஷ்ரேயாஸ் ஐயருக்கு அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. அதனை இந்த தொடரில் அவர் செய்து காட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதாவது இங்கிலாந்து மண்ணில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய கேப்டன்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டி20 தொடரை கைப்பற்றியது. அதற்கடுத்து 2022-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை இங்கிலாந்து மண்ணில் கைப்பற்றியிருந்தது. இப்படி இரண்டு கேப்டன்கள் மட்டுமே இங்கிலாந்து மண்ணில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : 12 பந்துகளில் 2 சிக்ஸ் தேவை.. முதல் சர்வதேச வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

இவ்வேளையில் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றினால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து இங்கிலாந்து மண்ணில் டி20 தொடரை கைப்பற்றிய கேப்டன் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்துவார். ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பான கேப்டன்சி செய்து அசத்திய ஷ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -