
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அண்மையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற டி20 தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்தது. 2026 டி20 உலககோப்பை தொடரை வென்றதற்கு பின்னர் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
குறிப்பாக கடந்த 16 இருதரப்பு டி20 தொடர்களில் தோல்வியே காணாத இந்திய அணி 1050 நாட்கள் கழித்து ஒரு டி20 தொடரை இழந்துள்ளது. இப்படி அனுபவம் இல்லாத அயர்லாந்து அணியிடம் வலிமையான இந்திய அணி தோல்வியை சந்தித்தது சற்று விமர்சிக்கப்படும் விடயமாக மாறியிருந்தது.
இந்நிலையில் இந்த ஒரு தோல்வியால் இந்திய அணியின் வீரர்களை விமர்சிக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய டி20 அணிக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அயர்லாந்து அணியிடம் இந்திய அணி தோற்றுது ஒரு வகையில் நல்ல விடயம் தான்.
ஏனெனில் இதுபோன்ற தோல்விகள் தான் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கும். பல்வேறு சிறிய அணிகளும் கிரிக்கெட் விளையாட உள்ளே வரும். இதை அனைத்தையும் தாண்டி என்னால் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. டாஸ் போடுவதற்கு முன்புவரை ஒரு வீரரை தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.
இதையும் படிங்க : தோனியுடனான தனது மறக்க முடியாத சந்திப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த – சாய் சுதர்சன்
ஆனால் அவர் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர்களை தூக்கி எறிந்து விடுகிறீர்கள். இதற்கு முன்னரும் இதேபோன்று பலம் வாய்ந்த இந்திய அணி இதுபோன்ற சிறிய அணிகளிடம் தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் யாரும் இந்திய அணியையும், இந்திய வீரர்களையும் இழிவாக பேசக்கூடாது என்று தான் கேட்டுக் கொள்வதாக ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.