இந்தியாவை அடக்க இதான் ஒரே வழி.. உங்க வீரர்களை அனுப்பாதீங்க.. வெளிநாடுகளுக்கு இன்சமாம் கோரிக்கை

Inzamam Ul Haq
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் நடப்புச் சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் மோசமான உலக சாதனை படைத்து பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது.

முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் உருவாகியுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய விளையாடும் செமி ஃபைனல் போட்டி கயானாவில் தான் நடைபெறும் என்று ஐசிசி முன்னதாகவே அறிவித்தது. இது போக 2023 ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு சென்ற விளையாட இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடியது.

- Advertisement -

இந்தியாவை அடக்க:

அப்படி இந்தியா தாங்கள் விரும்பும் விஷயங்களை மற்ற நாடுகளைக் கேட்காமலேயே செய்கிறது. அதற்கு ஐசிசி எதிர்ப்பு தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டுகிறது. அதற்கான காரணம் என்னவெனில் ஐபிஎல் தொடரால் ஐசிசிக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் பணம் இந்தியாவிடம் இருந்து செல்கிறது. அதனால் இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு ஐசிசி தலையசைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில் வெளிநாட்டு அணிகள் தங்களுடைய வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுப்பக்கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார். அதுவே இந்தியாவை அடக்குவதற்கு ஒரே வழி என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி பாகிஸ்தானி டிவி எனும் தொலைக்காட்சியில் இன்சமாம் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஒரே வழி ஐபிஎல்:

“சாம்பியன்ஸ் டிராபியை ஒரு பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். உலகின் டாப் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். ஆனால் இந்தியாவின் டாப் வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் மற்ற லீக் தொடர்களில் விளையாடுவதில்லை. எனவே வெளிநாட்டு அணிகளின் வாரியங்கள் தங்களுடைய வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுப்பாமல் நிறுத்த வேண்டும்”

இதையும் படிங்க: எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள கோலியின் 300-ஆவது போட்டி.. 2017 மேஜிக் மீண்டும் நிகழுமா? – விவரம் இதோ

“உங்களது வீரர்களை நீங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கவில்லை என்றால் அதையே மற்ற வெளிநாட்டு வாரியங்களும் பின்பற்றுவார்கள்” என்று கூறினார். இத்தனைக்கும் பாகிஸ்தான் அணி தற்போது அடுத்தடுத்த தோல்விகளால் பாதாளத்தில் தவிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தங்கள் அணியை முன்னேற்றவர்கள் கவனம் செலுத்தாத பாகிஸ்தானியர்கள் இந்தியாவை சாய்ப்பதில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement