எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள கோலியின் 300-ஆவது போட்டி.. 2017 மேஜிக் மீண்டும் நிகழுமா? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் மார்ச் இரண்டாம் தேதியான இன்று நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியானது சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்சல் சான்ட்னர் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

300 ஆவது போட்டியில் மேஜிக் நிகழ்த்துவாரா விராட் கோலி :

இந்நிலையில் இந்த போட்டியில் ஒரே ஒரு மாற்றத்தை செய்த ரோகித் சர்மா ஹர்ஷித் ராணாவிற்கு ஓய்வு கொடுத்துள்ளதாக தெரிவித்து அவருக்கு பதிலாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி விளையாடுவார் என்று அறிவித்தார். அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்த போட்டியானது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு 300-வது போட்டியாகவும் அமைந்துள்ளதால் இந்த போட்டி ரசிகர் மத்தயில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சமீபகாலமாக மோசமான ஃபார்ம் காரணமாக தவித்து வந்த விராத் கோலி வங்கதேச அணிக்கு எதிராக பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் ஏமாற்றம் அளித்திருந்தார்.

ஆனாலும் அதன்பின்னர் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சதம் அடித்ததோடு இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். அதே பார்மை அவர் இந்த போட்டியிலும் தொடர்வார் என்கிற நம்பிக்கை அனைவரது மத்தியிலும் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் விராட் கோலி 2017 ஆம் ஆண்டு செய்த ஒரு மேஜிக்கை மீண்டும் செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு இதே நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 200-வது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த விராட் கோலி அந்த போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : நியூஸிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருணுக்கு வாய்ப்பு.. கோலி ஸ்பெஷல் சாதனை.. டாஸ் பற்றி ரோஹித் பேட்டி

இன்று 8 ஆண்டுகள் கழித்து அதே நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் அவர் மீண்டும் அதே போன்று சதத்தை விளாசி மேஜிக்கை நிகழ்த்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 51 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி இன்று சதமடித்தால் அது அவரது 52-ஆவது ஒருநாள் சதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement