IPL 2023 : அலெக்ஸ் ஹேல்ஸ் உலக சாதனை சமன், வேறு யாருமே படைக்காத தனித்துவமான ஐபிஎல் வரலாறு படைத்த கிங் கோலி

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே 82* ரன்கள் குவித்து வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் கொல்கத்தாவுக்கு எதிரான 2வது போட்டியில் 21 (18) ரன்கள் மட்டுமே எடுத்த அவர் லக்னோவுக்கு எதிரான 3வது போட்டியில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு 61 (44) ரன்கள் குவித்தார். அவருடன் டு பிளேஸிஸ் 79* (46) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 59 (29) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூர் 212/2 ரன்கள் குவித்தது.

Pooran RCB vs LSg

- Advertisement -

ஆனாலும் பந்து வீச்சில் பெங்களூரு பவுலர்கள் வழக்கம் போல வள்ளலாக அந்த ரன்களை வாரி வழங்கியதால் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியே கிடைத்தது. குறிப்பாக 3 விக்கெட்டுகள் எடுத்த முகமது சிராஜ் தவிர்த்து ஏனைய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி வெற்றியைக் கோட்டை விட்டனர். அதை பயன்படுத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 0, தீபக் ஹூடா 9, க்ருனால் பாண்டியா 0, கேஎல் ராகுல் 18 (20) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மார்கஸ் ஸ்டோனிஸ் சரவெடியாக 65 (30) ரன்களும் நிக்கோலஸ் பூரான் முரட்டுத்தனமாக 62 (19) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

உலக சாதனை சமன்:
இறுதியில் கடைசி பந்தில் மன்கட் செய்வதில் ஹர்ஷல் படேலும் ரன் அவுட் செய்வதில் தினேஷ் கார்த்திக் செய்த சொதப்பலை பயன்படுத்தி லக்னோ த்ரில் வெற்றி பெற்றதால் விராட் கோலி, டு பிளேஸிஸ் உள்ளிட்ட பெங்களூரு பேட்ஸ்மேன்களின் போராட்டம் வீணானது. இருப்பினும் தனது பேட்டிங்கை காண வந்த ரசிகர்களுக்கு 4 பவுண்டரி 4 சிக்சருடன் 61 (43) ரன்கள் குவித்து விருந்து படைத்த விராட் கோலி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தன்னுடைய 24வது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார்.

இதன் வாயிலாக ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 24, பெங்களூரு சின்னசாமி மைதானம்*
2. அலெக்ஸ் ஹேல்ஸ் : 24, ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம், இங்கிலாந்து
3. தமிம் இக்பால் : 21, மிர்பூர் மைதானம், வங்கதேசம்
4. ஜேசன் ராய் : 21, கென்னிங்ஸ்டன் ஓவல், இங்கிலாந்து
5. டேவிட் வார்னர் : 19, ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்

- Advertisement -

முன்னாதாக 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் ஒரே அணிக்காக (பெங்களூரு) விளையாடி வரும் வீரர் வரலாற்றுச் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளது நாம் அனைவரும் அறிவோம். அந்த நிலையில் கடந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோவுக்கு எதிராக நேற்றைய போட்டியில் முதல் முறையாக விராட் கோலி அரை சதமடித்தார்.

Kohli

இதற்கு முன் சென்னை (9 அரை சதங்கள்), டெல்லி (8), கொல்கத்தா (5), மும்பை (5), ஹைதெராபாத் (4), ராஜஸ்தான் (4), டெக்கான் சார்ஜர்ஸ் (4), குஜராத் லயன்ஸ் (3), குஜராத் டைட்டன்ஸ் (2), ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் (3), பஞ்சாப் (3), புனே வாரியர்ஸ் இந்தியா (1) என ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய 12 பல்வேறு அணிகளுக்கு எதிராகவும் குறைந்தது அவர் தலா 1 அரை சதங்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : ஒருமுறையா.. இருமுறையா.. இப்படி பெங்களூரு அணி அசிங்கப்படறது 5 ஆவது முறையாம் – இது வேறயா?

சொல்லப்போனால் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை தவிர்த்து ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய எஞ்சிய 13 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விராட் கோலி குறைந்தது ஒரு அரை சதமடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக அணிகளுக்கு எதிராக குறைந்தது 1 அரை சதமடித்த வீரர் என்ற தனித்துவமான வரலாற்றுச் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் கௌதம் கம்பீர், டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் இதே போல 12 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக குறைந்தது ஒரு அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement