IPL 2023 : ஒருமுறையா.. இருமுறையா.. இப்படி பெங்களூரு அணி அசிங்கப்படறது 5 ஆவது முறையாம் – இது வேறயா?

Harshal-Patel
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியானது கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்தது. முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை அளித்தது என்று கூறலாம்.

RCB vs LSG

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய பெங்களூரு அணியானது ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது துவக்க வீரர்கள் கோலி மற்றும் டூப்ளிசிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் அதிரடியான துவக்கம் கண்டது.

பின்னர் கோலி 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மூன்றாவது வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஆட்டம் மிழந்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த டூபிளெஸ்ஸிஸ் 79 ரன்களை குவித்தார். இப்படி பெங்களூர் அணியின் டாப் 3 வீரர்களும் அரைசதம் அடிக்க 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணியானது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.

LSG

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்திய லக்னோ அணியானது துவக்கத்திலேயே 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பின்னர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் பூரான் ஆகியோரது அதிரடியான ஆட்டம் காரணமாக வெற்றிக்கு சாத்தியமே இல்லாத இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளனர்.

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 213 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியினை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது இதுவரை ஐபிஎல் வரலாற்றில் முதலாவதாக பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்தும் ஐந்தாவது முறையாக மோசமான பவுலிங் காரணமாக தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : நடத்தையின்றி நடந்துகொண்ட ஆவேஷ் கான், வசமாக செய்த அம்பயர் – டு பிளேஸிஸ்க்கு நேர்ந்த சோகம், நடந்தது என்ன

இப்படி ஒரு அணி 200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து அதிகமுறை தோற்றது என்றால் அது பெங்களூரு அணி தான் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. வேறுயெந்த ஒரு அணியும் ஐ.பி.எல் தொடரில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியை சந்தித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement